Published:Updated:

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள்; பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட மாணவி!

தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் விரக்தியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள்; பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட மாணவி!

மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் விரக்தியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

Published:Updated:
தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோர் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு எழுதுகின்றனர். அந்த வகையில், நடந்த முடிந்த நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், மகாராஷ்டிரா மாநிலம், அகோலாவைச் சேர்ந்த மாணவி ரோகினி பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். ரோகினியின் தந்தை ராஜஸ்தானில் வசிக்கிறார். அவர் மாமாவுடன் அகோலாவில் தங்கியிருந்தார். ரோகினிக்குத் தன் தந்தையைப் போன்று மருத்துவராக வேண்டும் என்று கனவு இருந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் ரோகினிக்கு போதிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இதனால் நகரிலுள்ள மோர்னா நதி பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

மரணம்
மரணம்
சித்திரிப்புப் படம்

முன்னதாக, ரோகினி கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் 350 மதிப்பெண் எடுத்திருந்தார். இந்த ஆண்டு அதாவது இரண்டாவது முறையாக நீட் தேர்வில் 420 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். ரோகினி பொதுப் பிரிவில் வருவதால், அவர் 565-க்கு மேல் மதிப்பெண்கள் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால், எதிர்பார்த்ததைவிட குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் ரோகிணி விரக்தியடைந்திருக்கிறார். நேற்று இரவு வழக்கம்போல் ரோகினி குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றார். அனைவரும் தூங்கிய பிறகு ரோகினி எழுந்து சென்று பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். காலையில்தான் இது குறித்து குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. ஆற்றில் விழுந்து இறந்த ரோகினியின் உடலை மீட்டு வழக்கு பதிவுசெய்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

தற்கொலை தடுப்பு மையம்
தற்கொலை தடுப்பு மையம்