Published:Updated:

மகாராஷ்டிரா: ஜேசிபி-யால் ஏடிஎம் இயந்திரத்தைப் பெயர்த்தெடுத்து திருடிச் சென்ற கொள்ளையர்கள்!

ஏ.டி.எம் சென்டரை உடைக்கும் ஜே.சி.பி

மகாராஷ்டிராவில் திருடர்கள் ஜே.சி.பி-யைப் பயன்படுத்தி ஏ.டி.எம் இயந்திரத்தைத் தோண்டி எடுத்துச் சென்றுவிட்டனர்.

மகாராஷ்டிரா: ஜேசிபி-யால் ஏடிஎம் இயந்திரத்தைப் பெயர்த்தெடுத்து திருடிச் சென்ற கொள்ளையர்கள்!

மகாராஷ்டிராவில் திருடர்கள் ஜே.சி.பி-யைப் பயன்படுத்தி ஏ.டி.எம் இயந்திரத்தைத் தோண்டி எடுத்துச் சென்றுவிட்டனர்.

Published:Updated:
ஏ.டி.எம் சென்டரை உடைக்கும் ஜே.சி.பி

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபகாலமாக ஏ.டி.எம் கொள்ளைகள் அதிக அளவில் நடந்துவருகின்றன. பெரும்பாலான இடங்களில் ஏ.டி.எம் இயந்திரங்களை வெடிவைத்து தகர்த்தோ அல்லது அடியோடு பெயர்த்தெடுத்தோ தூக்கிச் செல்லும் சம்பவங்கள் நடக்கின்றன. அந்த வகையில், தற்போதும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மாநிலத்தின் சாங்கிலியில் உள்ள மீரஜ் என்ற இடத்தில் ஆக்சிஸ் வங்கியின் ஏ.டி.எம் மையம் இருக்கிறது. இந்த ஏ.டி.எம் மையத்தில் நேற்று நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுப்பது கஷ்டம் என்பதை உணர்ந்து, இயந்திரத்தை அப்படியே தங்களது இடத்துக்கு தூக்கிச் சென்று அங்குவைத்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டிருக்கின்றனர். அதனால், அவர்கள் கொள்ளையடிக்க வரும்போதே ஜே.சி.பி வண்டியையும் கூடவே கொண்டுவந்திருக்கின்றனர். அவர்கள் ஜே.சி.பி மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை அப்படியே தோண்டி எடுத்து வண்டியில் வைத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். மறுநாள் காலையில்தான் ஏ.டி.எம் இயந்திரம் காணாமல்போனது தெரியவந்தது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

ஏ.டி.எம் சென்டரை உடைக்கும் ஜே.சி.பி
ஏ.டி.எம் சென்டரை உடைக்கும் ஜே.சி.பி

ஏ.டி.எம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தபோதுதான் கொள்ளையர்கள் இயந்திரத்தை திருடிச் செல்ல ஜே.சி.பி வண்டியைப் பயன்படுத்தியது தெரியவந்தது. ஜே.சி.பி ஏ.டி.எம் மையத்தின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த இயந்திரத்தை எடுப்பது தெளிவாகக் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது.

ரூ.27 லட்சம் கொள்ளை!

இது குறித்து இந்த வழக்கை விசாரித்துவரும் இன்ஸ்பெக்டர் பத்ரே கூறுகையில், ``கொள்ளையர்கள் அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கில் நின்ற ஜே.சி.பி வண்டியைத் திருடி எடுத்துச் சென்று ஏ.டி.எம் இயந்திரத்தைத் திருடியிருக்கின்றனர். ஜே.சி.பி-யும், காலி ஏ.டி.எம் இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதிலிருந்த 27 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism