Published:Updated:

`ஆபாசப் படங்களைக் காட்டி சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; பா.ஜ.க பிரமுகர் கைது!'

மகாலிங்கம்
மகாலிங்கம்

மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்குப்  பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பா.ஜ.க தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவல் சரகத்துக்கு உட்பட்ட கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 60). இவர் ஃபைனான்ஸ் தொழில் செய்துவருகிறார். மேலும், மயிலாடுதுறை பா.ஜ.க தெற்கு ஒன்றிய துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

மகாலிங்கம்
மகாலிங்கம்

மகாலிங்கம் அந்தப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச்  சேர்ந்த 11 வயது மற்றும் 7 வயது சிறுமிகள் உட்பட  ஆறு சிறுமிகளிடம் தனது செல்போனிலுள்ள ஆபாசப் படங்களை காண்பித்து, அதுபோல் தன்னிடம் நடந்துகொள்ள வேண்டும் என்று பாலியல் தொல்லை தந்திருக்கிறார். இது குறித்து வெளியில் சொன்னால் அடித்துக் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவம் பற்றி ஒரு சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர். அதன் பேரில் மகாலிங்கத்தை போலீஸார் கைதுசெய்து, அவரின் செல்போனில் ஆபாசப்படங்கள் நிறைய இருப்பதை ஆய்வு செய்தனர்.

 மயிலாடுதுறை Police station
மயிலாடுதுறை Police station

அதன் பிறகு குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல், சிறுமிகளின் பாலியல் இச்சையை தூண்டுதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் மகாலிங்கத்தின் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு