Published:Updated:

சென்னை: மதுபோதையில் கன்னத்தில் அறைந்த மகன்... அம்மாவுக்கு நேர்ந்த கொடூரம்!

சென்னையில் மதுபோதையில் அம்மாவைக் கொலை செய்த மகனை போலீஸார் கைதுசெய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை, கொடுங்கையூர் எம்.ஆர்.நகர், 1-வது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அம்சா (64). இவரின் மகன் சதீஷ் என்கிற சதீஷ்குமார் (36). கடந்த 9-ம் தேதி இரவு மதுபோதையில் சதீஷ் வீட்டுக்கு வந்தார். அப்போது சதீஷுக்கும் அவரின் அம்மா அம்சாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ், பெற்ற தாய் என்றுகூடப் பாராமல் அம்சாவின் கன்னத்தில் அடித்திருக்கிறார். அதில் அம்சா மயங்கிவிழந்தார். உடனே அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்ட அம்சாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கொலை
கொலை
குடிபோதையில் தினமும் சித்ரவதை: சகோதரனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவி கைது!

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அம்சா 12-ம் தேதி உயிரிழந்தார். இது குறித்து அம்சாவின் உறவினர் கொடுத்த புகாரின்பேரில் கொடுங்கையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து சதீஷிடம் விசாரித்தனர். விசாரணையில் அம்சாவின் கன்னத்தில் அறைந்த சதீஷ்குமார், அவரின் கழுத்தைப் பிடித்து நெரித்திருக்கிறார். அதனால்தான் அம்சா உயிரிழந்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து சதீஷை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு