Published:Updated:

மும்பை: போலீஸாரிடமிருந்து தப்பிக்க 4-வது மாடியிலிருந்து குதித்த திருடன் - சிகிச்சை பலனின்றி பலி

ஆபத்தான இடத்தில் திருடன்

இறங்கி வந்தால் அடிக்க மாட்டோம் என்றும், சாப்பாடு கொடுப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். ஆனால் திருடன் பயத்தில் இருந்தான்.

மும்பை: போலீஸாரிடமிருந்து தப்பிக்க 4-வது மாடியிலிருந்து குதித்த திருடன் - சிகிச்சை பலனின்றி பலி

இறங்கி வந்தால் அடிக்க மாட்டோம் என்றும், சாப்பாடு கொடுப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். ஆனால் திருடன் பயத்தில் இருந்தான்.

Published:Updated:
ஆபத்தான இடத்தில் திருடன்

மும்பையின் தென்பகுதியிலுள்ள மெரைன் டிரைவ் பகுதியில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் திருடன் ஒருவன் அதிகாலையில் திருடுவதற்காக பைப் வழியாக மேலே ஏறினான். அதிகாலை 5 மணிக்கு திருடனின் நடமாட்டத்தைக் கண்ட கட்டட வாட்ச்மேன் உடனே அதில் வசிப்பவர்களை உஷார்படுத்தினார். கட்டடத்தில் வசிப்பவர்கள் அனைவரும் எழுந்தனர். திருடன் நான்காவது மாடியில் வெளியிலிருக்கும் பால்கனி போன்ற கான்கிரீட் தளத்தில் நின்றுகொண்டிருந்தான். அந்த கான்கிரீட் பகுதி மூன்று அடிதான் இருக்கும். அவனைப் பிடிக்க பொதுமக்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

ஆபத்தான இடத்தில் திருடன்
ஆபத்தான இடத்தில் திருடன்

இதனால் திருடனை பத்திரமாக இறங்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். அதற்குள் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸார் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களும் திருடனை பத்திரமாக இறக்க முயன்றனர். ஏற்கெனவே கடந்த சில நாள்களாக மழை பெய்துகொண்டிருந்ததால் திருடன் நின்ற இடம் மிகவும் ஈரமாக இருந்தது. எனவே, திருடன் தவறி கீழே விழுந்தால் அவனைக் காப்பாற்ற தீயணைப்புதுறையினர் கீழே பாதுகாப்பு வலையை விரித்தனர். கட்டடத்தில் வசிப்பவர்களும் பத்திரமாக இறங்கும்படி கேட்டனர்.

அதோடு இறங்கி வந்தால் அடிக்க மாட்டோம் என்றும், சாப்பாடு கொடுப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் திருடன் பயத்தில் இருந்தான். அவர்களிடம் சிக்கினால் தர்ம அடி கொடுப்பார்கள் என்று நினைத்து அப்படியே இருந்தான். இந்தச் சம்பவம் காலை 7 மணி வரை நீடித்தது. இறுதியில் திருடன் அவனிருந்த கட்டடத்துக்கு பக்கத்து கட்டடத்தின் காம்பவுண்டுக்குள் குதித்தான். இதில் படுகாயமடைந்த அந்தத் திருடன் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனான். அவனது பெயர் ரோஹித் என்றும், 26 வயது என்றும் தெரியவந்திருக்கிது. அவன் இந்தி மற்றும் பெங்காலி மட்டும் பேசினான். அவனுடைய உறவினர்கள் வரும் வரை உடலைப் பாதுகாத்துவைக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!