Published:Updated:

மும்பை: வங்கியில் கொல்லப்பட்ட பெண் மேலாளர்! - சிக்கிய முன்னாள் மேலாளர்

கைதுசெய்யப்பட்ட அனில்
கைதுசெய்யப்பட்ட அனில்

மும்பையில் இரவில் வங்கிக்குள் புகுந்த இரண்டு கொள்ளையர்கள் பெண் மேலாளரைக் கழுத்தை அறுத்து கொலை செய்து கொள்ளையடிக்க முயன்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வங்கிகளில் பொதுவாக பணி நேரம் முடிந்த பிறகு வங்கி மேலாளர் உட்பட சில அதிகாரிகள் வங்கிக்குள் இருந்து மீதி வேலையை முடிப்பது வழக்கம். அது போன்ற நேரத்தில், வங்கியின் கதவு பாதி அடைக்கப்பட்டிருக்கும். அப்படி பாதி அடைக்கப்பட்ட ஒரு வங்கிக்குள் புகுந்து கொள்ளையடிக்க மும்பையில் முயற்சி நடந்துள்ளது. மும்பை அருகிலுள்ள விராரில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக் கிளை இருக்கிறது. இந்தக் கிளையில் பணி முடிந்த பிறகும் மேலாளர் யோகிதா வர்தக், கேஸியர் ஸ்வேதா ஆகியோர் வங்கியின் கதவை பாதி மூடிவிட்டு உள்ளேயிருந்து வேலை செய்துகொண்டிருந்தனர். இரவு 7:30 மணிக்கு இரண்டு கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்தனர்.

கைதுசெய்யப்பட்ட அனில்
கைதுசெய்யப்பட்ட அனில்
பாகிஸ்தானிலிருந்து கடத்திவரப்பட்ட 530 கிலோ போதைப்பொருள்; பிடிபட்ட தலைமறைவு குற்றவாளி!

அவர்களுக்கு ஏற்கெனவே வங்கியில் பணியாற்றுபவர்கள் குறித்துத் தெரிந்திருந்தது. நேராக இருவரும் லாக்கர் இருக்கும் அறைக்குச் சென்று அங்கிருந்த மேலாளர் யோகிதா, கேஷியர் இருவரையும் கத்தியைக் காட்டி மிரட்டி லாக்கரிலிருந்த பணம், தங்க நகைகளை ஒரு சாக்கில் போட்டுக் கட்டினர். அவர்கள் இருவரும் பண மூட்டையுடன் தப்பிச் செல்ல முயன்றபோது யோகிதா சத்தம் போட்டு கத்தப் பார்த்தார். உடனே கொள்ளையர்களில் ஒருவன் தன்னிடமிருந்த ரேஸர் பிளேடை எடுத்து யோகிதாவின் கழுத்தை அறுத்துவிட்டான். இதில் யோகிதா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவருடன் இருந்த கேஷியர் ஸ்வேதா வங்கியிலிருந்த எச்சரிக்கை அலாரத்தின் மூலம் எச்சரிக்கை செய்தபோது அவரையும் கொள்ளையர்கள் ரேஸர் பிளேடால் வெட்டினர். இதில் ஸ்வேதா உதவி கேட்டுக் கத்தினார். வங்கி கீழ் தளத்தில் இருந்ததாலும், லேசாக திறந்திருந்ததாலும் ரோட்டில் செல்பவர்கள் ஓடி வந்து ஒரு கொள்ளையனைப் பிடித்தனர். மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான். தப்பி ஓடியவன் கொள்ளையடித்த பொருள்களை அப்படியே போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டான்.

கைது
கைது

பிடிபட்டவன் பெயர் அனில் துபே என்று தெரியவந்தது. போலீஸார் உடனே விரைந்து வந்து இரண்டு பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் யோகிதா ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஸ்வேதா மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அனில் துபே இதற்கு முன்பு இதே வங்கியில் மேலாளராகப் பணியாற்றியிருந்தான். தற்போது அருகிலுள்ள நைகாவில் இருக்கும் வேறு ஒரு தனியார் வங்கியில் மேலாளராக அவன் பணியாற்றிவந்தது விசாரணையில் தெரியவந்தது. வங்கியின் மாத இறுதி நாள்களில் மேலாளர் மற்றும் கேஷியர் இரவு வரை இருந்து வங்கிக் கணக்குகளைப் பார்ப்பது வழக்கம் என்று அனில் துபே அறிந்திருந்தான். அதோடு அந்த நேரத்தில் பெரிய அளவில் பாதுகாப்பு இருக்காது என்பதாலும், மேலாளர் பெண் என்பதாலும் இரண்டு கொள்ளையர்களும் துணிந்து இந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்தபோது செக்யூரிட்டி கேட்டில் பணியில் இருந்தாரா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டுவருகிறது. செக்யூரிட்டிக்கு இதில் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டுவருவதாக போலீஸார் தெரிவித்தனர். அதோடு வங்கியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புப் பதிவுகளை ஆய்வு செய்து, அதில் பதிவாகியிருக்கும் மற்றொரு கொள்ளையனைக் கைதுசெய்ய தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளையில் வேறு ஊழியர்கள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்றும் போலீஸார் விசாரித்துவருகின்றனர். இரவில் வங்கிக்குள் புகுந்து வங்கி மேலாளரைக் கொலை செய்துவிட்டு கொள்ளையடிக்க நடந்த முயற்சி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு