Published:Updated:

லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை; அதிகாரி மற்றும் திமுக, அதிமுக பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு

நாகப்பட்டினம் ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்தக்காரர்களிடடமிருந்து ரூ.58,000 ஆக மொத்தம் ரூ. 70,500 -ஐ பறிமுதல் செய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாகப்பட்டினம் ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை
லஞ்ச ஒழிப்புத்துறை

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அப்போது அதே அலுவலகத்தில் மாடியிலுள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சித்திரவேல் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது உதவி செயற்பொறியாளர் பேபியிடமிருந்து ரூ.12,500, மேலும் உதவி செயற்பொறியாளருக்கு  லஞ்சம் கொடுக்க வைத்திருந்த ஒப்பந்தக்காரர்கள் வைத்திருந்த ரூ.58,000 ஆக மொத்தம் ரூ. 70,500 -ஐ பறிமுதல் செய்தனர். இதனையடுத்து உதவி செயற்பொறியாளர் மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மாவட்ட ஆட்சியர், அலுவலகத்தில் இருக்கும்போதே லஞ்ச  ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வினோத். பேபி
வினோத். பேபி
Vikatan

லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய ரெய்டில் தி.மு.க.வைச் சேர்ந்த நாகை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமருகல் அஜிதா ராஜேந்திரன் மகன் வினோத்தும், திருமருகல் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் செல்வ.செங்குட்டுவன் சகோதரர் குமணனும் பணத்துடன் பிடிப்பட்டனர் என்றும், பின்னர் மேலிட அழுத்தத்தின் காரணமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர்களை விடுவித்ததாக செய்தி பரவியது. இதுபற்றி நாகை மாவட்ட லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சித்ரவேலுவிடம் விளக்கம் கேட்டோம். ``எங்கள் துறையில் கட்சி பேதம் பார்ப்பதில்லை. ரெய்டு நடந்த அன்று லஞ்சம் கொடுப்பதற்காக வந்திருந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றிய துணைச் சேர்மன், தி.மு.க.வைச் சேர்ந்த பிரமுகர்கள் உள்பட 5 பேர் மீதும் வழக்குப் பதிந்து சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு