Published:Updated:

நாமக்கல்: மனைவி கண்முன்னே படுகொலை செய்யப்பட்ட முன்னாள் எம்.பி-யின் பேரன்! - நடந்தது என்ன?

கொலை
கொலை

ராஜேந்திரன் சமீபத்தில் தனக்குச் சொந்தமான சொத்தை விற்றதாகச் சொல்லப்படுகிறது. அதனால் ஏற்பட்ட பணப் பிரச்னையில் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா எனப் பல கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பண்ணை வீட்டில் மனைவியோடு இருந்த முன்னாள் எம்.பி-யின் பேரனை மர்மக் கும்பல் துள்ளத்துடிக்கக் கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாமக்கல்
நாமக்கல்
நா.ராஜமுருகன்

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகேயுள்ள பேளுக்குறிச்சி மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). விவசாயியான இவருக்கு சுகன்யா (50) என்ற மனைவி இருக்கிறார். இந்தத் தம்பதிக்கு சுரேஷ் என்ற மகனும், சுபி என்ற மகளும் இருக்கிறார்கள். சுரேஷ் பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருக்கிறார். சுபி, திருமணமாகி கணவருடன் வசித்துவருகிறார். ராஜேந்திரனும் சுகன்யாவும் மாந்தோப்பிலுள்ள தங்களது தோட்டத்து வீட்டில் வசித்துவருகின்றனர்.

இந்தநிலையில், இரவு ராஜேந்திரன் வீட்டுக்கு வெளியே கட்டிலில் அமர்ந்திருந்தார். சுகன்யா வீட்டினுள்ளே வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு மர்ம நபர்கள் சிலர் வந்தனர். கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்த அந்த கும்பல், திடீரென ராஜேந்திரன் மீது பாய்ந்து தாக்கினர். இதைச் சற்றும் எதிர்பாராத ராஜேந்திரன் எழுந்து தப்பிக்க ஓட முயற்சித்தார். ஆனால், அந்தக் கும்பல் கத்தியால் ராஜேந்திரனின் நெஞ்சிலும் கழுத்திலும் சரமாரியாகக் குத்தியது. இதில், பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். கணவரின் அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்த சுகன்யா, கணவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து கதறித் துடித்தார். அதற்குள், மர்மக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

கொலை
கொலை

இது தொடர்பாக, பேளுக்குறிச்சி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், விசாரணை நடத்தினர். அதோடு, நாமக்கல் மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாகூர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, விசாரணை செய்தார். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களைச் சேகரித்தனர். கொலையாளிகளைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் பல்வேறு இடங்களுக்கு விரைந்தனர்.

சென்னை: கஞ்சியில் விஷம்; கணவனைக் கொலை செய்த மனைவி! -ஆண் நண்பருடன் சிக்கியது எப்படி?

கொலை செய்யப்பட்ட ராஜேந்திரன், திமுக-வின் முன்னாள் ராஜ்யசபா எம்.பி சோமசுந்தரத்தின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜேந்திரன் சமீபத்தில் தனக்குச் சொந்தமான சொத்தை விற்றதாகச் சொல்லப்படுகிறது. அதனால் ஏற்பட்ட பணப் பிரச்னையில் கொல்லப்பட்டாரா அல்லது வேறு தகராறு ஏதும் காரணமா எனப் பல கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையே, ராஜேந்திரன் கொலையில் கூலிப்படைக்குத் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி கூலிப்படைக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. திமுக-வின் முன்னாள் எம்.பி-யின் பேரன் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம், நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு