Published:Updated:

நாமக்கல்: `உன் வீட்டை எழுதித் தா...' - மீட்டர் வட்டி கேட்டு மளிகைக் கடை, வீட்டைச் சூறையாடிய கும்பல்

கடந்த சில மாதங்களாக அன்பரசன், பாலாஜி தன்னிடம் வாங்கிய கடன் ஒரு லட்சம் ரூபாய்க்கு மீட்டர் வட்டி போட்டு, 'மொத்தம் நான்கு லட்சம் ரூபாயைத் திருப்பிக் கொடு, இல்லையென்றால் வீட்டை எழுதித் தா' என்று ஜெகநாதனிடம் கேட்டிருக்கிறார்.

மீட்டர் வட்டி கேட்டு, மளிகைக் கடையையும் வீட்டையும் 15 பேர் அடங்கிய கும்பல் அடித்து நொறுக்கிய சம்பவம், நாமக்கல் மக்களை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. அப்படி, அடித்து நொறுக்கிய சம்பவத்தில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அடித்து நொறுக்கப்பட்ட வீடு
அடித்து நொறுக்கப்பட்ட வீடு
நாமக்கல்: கிணற்றில் தவறி விழுந்த பசு; மீட்க குதித்த விவசாயிக்கு நேர்ந்த துயரம்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த சேந்தமங்கலம் பிரிவு சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன், வயது 50. இந்தப் பகுதியில் சொந்தமாக மளிகைக் கடைவைத்து நடத்திவருகிறார். இவரின் முதல் மனைவி மல்லிகா. இவர்களுக்கு பாலாஜி என்ற மகனும் இருந்தார். குடும்பத் தகராறு காரணமாக ஜெகநாதன் மல்லிகாவை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பிறகு, இரண்டாவதாக சந்திரா (46) என்பவரைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அவர்களுக்கு 10, 14 வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில், ஜெகநாதனின் முதல் மனைவிக்குப் பிறந்த பாலாஜி கடந்த 2018-ம் ஆண்டு மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த அன்பரசன் என்பவரிடம் ரூபாய் ஒரு லட்சம் கடனாகப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

அடித்து நொறுக்கப்பட்ட வீடு
அடித்து நொறுக்கப்பட்ட வீடு

அப்படிக் கடன் பெற்ற பாலாஜி கடந்த 2019-ம் ஆண்டு இறந்துவிட்டார். இந்தச் சூழலுல், கடந்த சில மாதங்களாக அன்பரசன், பாலாஜி தன்னிடம் வாங்கிய கடன் ஒரு லட்சம் ரூபாய்க்கு மீட்டர் வட்டி போட்டு, 'மொத்தம் நான்கு லட்சம் ரூபாயைக் திருப்பிக் கொடு. இல்லையென்றால் வீட்டை எழுதித் தா' என்று ஜெகநாதனிடம் கேட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிக வட்டி ஆசை காட்டி 12,000 பேரை ஏமாற்றிய மதுரை நிதி நிறுவனம்; பின்னணியில் ரவுடி கும்பல்?

இதற்கு, ஜெகநாதன் மறுத்து வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 15-க்கும் மேற்பட்டவர்கள், ஜெகநாதன் மளிகைக் கடையை அடித்து நொறுக்கியதாகத் தெரிகிறது. மேலும், கற்களைக்கொண்டு அவரின் ஓட்டு வீட்டையும் அடித்து நொறுக்கியதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, அங்கே அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில், ஜெகநாதனின் இரண்டாவது மனைவி சந்திராவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சந்திரா
சந்திரா

தற்போது அவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது சம்பந்தமாக, ராசிபுரம் காவல் நிலைய போலீஸார், அன்பரசன், அவரின் தம்பி அய்யனார், கூலிப்படையைச் சேர்ந்த அஜித், வெங்கடாசலம், பவுன்ராஜ், சதீஸ்குமார் உள்ளிட்ட ஆறு பேரைக் கைதுசெய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் கூலிப்படையைச் சேர்ந்தவர்களைத் தேடிவருகின்றனர். மீட்டர் வட்டி கேட்டு, வீட்டையும், மளிகைக் கடையையும் அடித்து நொறுக்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு