நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (38). இவர், நாமக்கலில் கண் கண்ணாடிக்கடை வைத்து நடத்திவருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. உறவினர்கள் பல இடங்களில் இவருக்குப் பெண் தேடியும், பெண் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரைத் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி விஸ்வநாதன் கடத்திச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.

பின்னர், அந்தச் சிறுமியை, அந்தப் பகுதியிலுள்ள அறையில் அடைத்துவைத்து, விஸ்வநாதன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் நாமக்கல் நகர காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி, விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவுசெய்து அவரைக் கைதுசெய்தனர். அதோடு, விஸ்வநாதனை நாமக்கல் சிறையில் அடைத்தனர்.