Published:Updated:

நெல்லை: வாளுடன் நடனமாடிய கார் டிரைவர்; நண்பர் எடுத்த வீடியோவால் கைது!

நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம்
நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம்

இறப்பு வீட்டுக்குச் சென்ற கார் டிரைவர் ஒருவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துவிட்டு, கையில் வாளுடன் நடனம் ஆடியிருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதால் அவருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெல்லை மாநகரப் பகுதியிலுள்ள திருமால் நகரின் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசித்துவருபவர் மணிகண்டன். இவர் கார் டிரைவராகப் பணிபுரிகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் ஓர் இறப்பு வீட்டுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றிருக்கிறார்.

கத்தி, அரிவாளுடன் பிறந்தநாள் கேக் வெட்டினர்!- கோவையைப் பதறவைத்த ரவுடிகள்

இறப்பு வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்த மணிகண்டன், அதன் பின்னர் நண்பர்களோடு சேர்ந்து நடனமாடியிருக்கிறார். அப்போது அவர் கையில் வாளுடன் நடனமாடியிருக்கிறார். அதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அச்சத்தில் ஓரமாக ஒதுங்கி நின்றிருக்கிறார்கள்.

கையில் வாளுடன் மணிகண்டன் நடனத்தில் ஈடுபட்டதை அவருடைய நண்பர்கள் வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இரு தினங்களுக்கு முன்பு மணிகண்டனின் பிறந்தநாள் நிகழ்ச்சி தொடர்பாக மணிகண்டனின் நண்பர் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோவைப் பதிவிட்டிருக்கிறார்.

கையில் வாளுடன் நடனம்
கையில் வாளுடன் நடனம்

அந்த வீடியோவில் மணிகண்டனை வாழ்த்திய அந்த நண்பர், ஏற்கெனவே எடுக்கப்பட்ட கையில் வாளுடனான வீடியோவைப் பதிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. அதைப் பார்த்த பாளையங்கோட்டை சைபர் க்ரைம் போலீஸார், வீடியோ காட்சியில் இடம்பெற்றவர் யார் என்பது குறித்து விசாரித்துவந்தார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வைரலான வீடியோவில் கையில் வாளுடன் நடனம் ஆடியவர் டிரைவர் மணிகண்டன் என்பது தெரியவந்திருக்கிறது. அதனால் அவர்மீது கொலை மிரட்டல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை

அவரைக் கைதுசெய்ததுடன் அவரிடமிருந்த மூன்று அடி நீளமுள்ள வாளைப் பறிமுதல் செய்த போலீஸார், ஆரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு