Published:Updated:

துப்பாக்கியுடன் நள்ளிரவில் வனவிலங்கு வேட்டை; நண்பனின் முதுகை துளைத்த தோட்டா! நீலகிரியில் பயங்கரம்

gun
gun ( rep image )

பந்தலூர் வனப்பகுதியில் நள்ளிரவில் துப்பாக்கியுடன் வன விலங்கு வேட்டைக்குச் சென்ற கும்பலில் ஒருவரது முதுகில் தவறுதலாகப் பாய்ந்த தோட்டா நெஞ்சைத் துளைத்து வெளியேறியதில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகில் உள்ள தேவாலா காட்டிமட்டம் பகுதியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக வந்த தகவலின் பேரில், காவல்துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். இறந்தது 54 வயதான அபிப் என்பதும், அவரது உடலில் குண்டு துளைத்த அடையாளங்கள் இருப்பதையும் முதல்கட்ட விசாரணையில் கண்டறிந்தனர்.

கைதானவர்கள்
கைதானவர்கள்

இறந்தவரின் உடலை கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உணமைகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக இரண்டு நபர்களைக் கைது செய்து,மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் பேசுகையில், "கடந்த 1ஆம் தேதி நள்ளிரவு தேவாலா பகுதியைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று வன விலங்கு வேட்டைக்குத் துப்பாக்கியுடன் சென்றுள்ளனர். காட்டில் நடந்து செல்கையில் அபிப் தனது கையிலிருந்த துப்பாக்கியை உடன் வந்த அஷ்ரஃபிடம் கொடுத்திருக்கிறார். அஷ்ரஃப் எதிர்பாராதவிதமாக விசையை அழுத்தியுள்ளார், இதில் வெளியேறிய துப்பாக்கி குண்டு, அபிப் முதுகில் பாய்ந்து மார்பு வழியாக வெளியேறியுள்ளது.

விழுப்புரம்: துப்பாக்கி முனையில் அடுத்தடுத்து கொள்ளை - தீரன் பட பாணியில் மர்ம கும்பல் துணிகரம்
Gun shot
Gun shot

ரத்த வெள்ளத்தில் இறந்த அவரது உடலை தேயிலை தோட்டத்தில் மறைத்துவிட்டு தப்பி ஒட்டியுள்ளனர். இது தொடர்பாக அஷ்ரஃப், ரதீஷ், ஆகிய இரண்டு நபர்களை கைது செய்துள்ளோம். சட்டவிரோதமாக வைத்திருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ளோம்.தலைமறைவில் உள்ள ஆசிக் என்பவரை தேடி வருகிறோம்.இந்த வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.விசாரணை மேலும் தீரப்படுத்தப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு