Published:Updated:

`பெரியகுளத்தில் மேலும் 500 ஏக்கர் அரசு நிலத்துக்கு முறைகேடாக பட்டா'- ஆர்டிஐ மூலம் வௌியானது

பெரியகுளம் மஞ்சளாறு அணை அருகே உள்ள 500 ஏக்கர் அரசு நிலத்துக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டிருக்கிறது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதற்குரிய ஆவணங்களைப் பெற்றிருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பெரியகுளம் வட்டத்தில் வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள 100 ஏக்கர் அரசு நிலத்தை அதிமுக ஒன்றியச் செயலாளர் அன்னப்பிரகாஷ், அவரது உறவினர்கள் பெயர்களுக்கு பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. இவ்விவகாரத்தில் தொடர்புடைய நான்கு தாசில்தார்கள், 2 சர்வேயர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். அதேபோல அதிமுக ஒன்றியச் செயலாளரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். மேலும் இந்த முறைகேடு தொடர்பாக தீவிர விவசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அனைவரின்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உறுதியளித்திருக்கிறார். இந்த நிலையில் நெற்றிக்கண் நுகர்வோர் சங்கத்தினர் பெரியகுளம் மஞ்சளாறு அணை அருகே உள்ள 500 ஏக்கர் அரசு நிலத்துக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டிருக்கிறது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதற்குரிய ஆவணங்களைப் பெற்றிருக்கின்றனர்.

`100 ஏக்கர் அரசு நிலத்துக்கு முறைகேடாகப் பட்டா' - நான்கு வட்டாட்சியர்கள் பணியிடை நீக்கம்
நிலம்
நிலம்

அதனடிப்படையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆதாரங்களுடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப்பிடம் மனு அளித்தனர். அதில், அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களாக அரசு ஆவண பதிவேட்டில் இருந்த 500 ஏக்கர் நிலம் தனியார் நிறுவன உரிமையாளர்கள் பெயர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தனர்.

அரசப்பன்
அரசப்பன்

இதுகுறித்து நெற்றிக்கண் நுகர்வோர் சங்கத்தின் தலைவர் அரசப்பனிடம் விசாரித்தோம். ``இதுகுறித்து அறிவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பலமுறை அணுகினோம். உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற முயன்றோம். கடந்த 2 ஆண்டுகளாக முயன்று தற்போதுதான் நாங்கள் கேட்ட ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கியிருக்கிறார்கள். இந்த ஆவணங்களைப் பார்த்தபோது, ``தான் 500 ஏக்கர் நிலம் முறைகேடாக பட்டா போடப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சப்-கலெக்டரிடம் தெரிவித்தோம். அவர் விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு