Published:Updated:

கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல்... 4 நாள்களில் விசாரணை! - வேகமெடுக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.

நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது. இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அப்போது நீதிமன்றத்தில் சி.பி.ஐ முதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
தி.மு.க ஆட்சியிலாவது நீதி கிடைக்குமா? - பொள்ளாச்சி பாலியல் வழக்கு

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் அதிமுக பிரமுகர்கள் மூன்று பேர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓர் இளைஞர் என்று, தற்போதுவரை இந்த ஆண்டு நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் ஒன்பது பேர் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் குற்றம்சாட்டப்பட்ட அருளானந்தம், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவில், வழக்கு விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், கோவை மகளிர் நீதிமன்றத்தில்,

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ தாக்கல் செய்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பெண்களும் சாட்சிகளும் அளித்த தகவல்கள் இதில் இடம்பெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் குற்ற பத்திரிகை நகல் விரைவில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. அடுத்ததாக செப்டம்பர் 1-ம் தேதி முதல், அதாவது இன்னும் நான்கு நாள்களில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கவிருக்கிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

செப்டம்பர் 1-ம் தேதி முதல், கோவை மகளிர் நீதிமன்றத்தில் தினந்தோறும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை நடத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு