Election bannerElection banner
Published:Updated:

புதுக்கோட்டை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை; குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை! - மகிளா நீதிமன்றம்

குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

வழக்கு விசாரணையில், பாலமுருகனுக்கு 10ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து நீதிபதி முனைவர் சத்யா அதிரடி தீர்ப்பளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். கடந்த 30.12.2019 அன்று, இவர் தனது வீட்டுக்குப் பக்கத்துத் தெருவில் வசிக்கும் 4 வயது சிறுமி, விளையாடிக்கொண்டிருந்தபோது அவரைப் பாலியல் வன்முறை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் பாலமுருகனைக் கைதுசெய்தனர்.

காவலர்கள்
காவலர்கள்

இந்த வழக்கு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் கடந்த ஒரு வருடமாக நடைபெற்றுவந்தது. அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் அங்கவி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையில், பாலமுருகனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து நீதிபதி முனைவர் சத்யா அதிரடி தீர்ப்பு அளித்தார். அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கெனவே அரசு சார்பில் ரூ.2.5 லட்சம் நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, மேலும் கூடுதலாக ரூ.2.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு