Published:Updated:

புதுக்கோட்டை: மதுபோதையில் தகராறு; தாயின் கழுத்தை நெரித்த தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!

கொலை

சுப்பிரமணியன், தனது மனைவியின் கழுத்தை நெரிக்க, இதைப் பார்த்த அவரின் மூத்த மகன் பிரேம்குமார், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து சுப்பிரமணியனின் கை, கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரங்கிணாம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (45). இவர் அப்பகுதியிலுள்ள கிரஷர் ஒன்றில் தினக்கூலியாக வேலை பார்த்துவருகிறார். மனைவி, இரு மகன்களுடன் வசித்துவந்தார். இந்த நிலையில், தினமும் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு வரும்போது மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதோடு, அக்கம் பக்கத்தினரிடம் அவர் தகராறில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. வழக்கம் போல் சுப்பிரமணியன் மது அருந்திவிட்டு மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கொலை
கொலை

அப்போது சுப்பிரமணியன், தனது மனைவியின் கழுத்தை நெரிக்க, இதைப் பார்த்த அவரின் மூத்த மகன் பிரேம்குமார், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து சுப்பிரமணியனின் கை, கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து பனையப்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து, தந்தையைக் கொலைசெய்த பிரேம்குமாரைக் கைதுசெய்தனர். மேலும் இது குறித்து விசாரித்துவருகின்றனர். புதுக்கோட்டை அருகே குடும்பத் தகராறில் தந்தையை, மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.