Published:Updated:

கமுதி: ஊராட்சித் தலைவரைக் கொல்ல முயன்ற கூலிப்படை; சோதனைச் சாவடியில் மடக்கிய போலீஸ்! - நடந்தது என்ன?

கொலை செய்ய முயன்ற கூலிப்படையினர்
கொலை செய்ய முயன்ற கூலிப்படையினர் ( உ.பாண்டி )

செல்லப்பெருமாள் மகன் பார்த்தசாரதி, அவர்களை அழைத்து வந்து ஊராட்சி மன்றத் தலைவர் முத்துவிஜயனைக் கொலை செய்ய ஏவியது தெரியவந்தது.

கமுதி அருகே ஊராட்சிமன்றத் தலைவரைக் கொலை செய்ய முயன்ற கூலிப்படையினர் உள்ளிட்ட ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்தனர். இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்த போலீஸார், விசாரணை நடத்திவருகின்றனர்.

கொலை செய்ய முயன்ற கூலிப்படையினர்
கொலை செய்ய முயன்ற கூலிப்படையினர்
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நகரத்தார்குறிச்சியைச் சேர்ந்தவர் முத்துவிஜயன் (51). இவர், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நகரத்தார்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். மேலும், தொடர்ச்சியாக எட்டு முறை இவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களே ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்தநிலையில், நேற்று காலை வயலுக்குச் சென்ற முத்துவிஜயனை, நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாள் மற்றும் வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்யத் துரத்தியிருக்கிறது.

பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்
உ.பாண்டி

அவர்களிடமிருந்து தப்பி ஓடிய முத்துவிஜயன் அருகிலிருந்த ஊருக்குள் சென்று உயிர் பிழைத்தார். இதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக அபிராமம் காவல் நிலையத்தில் முத்துவிஜயன் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அபிராமம் போலீஸார், கமுதிப் பகுதியிலிருந்து வெளியேறும் பகுதிகளிலுள்ள சோதனைச் சாவடிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்தநிலையில் மானாமதுரை சோதனைச் சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இருசக்கர வாகனங்களில் வந்த நால்வரைத் தடுத்து நிறுத்தி, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் உருவாட்டியைச் சேர்ந்த தங்கசாமி மகன் சூர்யா (23), பெரியதம்பிளிக்கை பகுதியைச் சேர்ந்த மோகன் மகன் குரு (23), ஆவாரங்காடைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் முருகன் (36), திருநெல்வேலி மாவட்டம், பொட்டல்புதூரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கிருஷ்ணசாமி (24) ஆகியோர் என்பதும், ஊராட்சித் தலைவர் முத்துவிஜயனைக் கொலை செய்ய வந்த கூலிப்படையினர் என்பதும் தெரியவந்தது.|

கொலை செய்ய முயன்ற கூலிப்படையினர்
கொலை செய்ய முயன்ற கூலிப்படையினர்
உ.பாண்டி

இதையடுத்து நான்கு பேர்கொண்ட கூலிப்படை கும்பல் குறித்து அபிராமம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அபிராமம் போலீஸார் கூலிப்படையினரைக் கைதுசெய்து விசாரணை நடத்தியதில், அபிராமத்தை அடுத்த நகரத்தார்குறிச்சியைச் சேர்ந்த செல்லப்பெருமாள் மகன் பார்த்தசாரதி (44) அவர்களை அழைத்து வந்து ஊராட்சி மன்றத் தலைவர் முத்துவிஜயனைக் கொலை செய்ய ஏவியது தெரியவந்தது. இதன்பேரில் பார்த்தசாரதியை கைதுசெய்த போலீஸார், இந்தக் கூலிப்படையினர் வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு