Published:Updated:

ராணிப்பேட்டை: `என் குழந்தைகளைக் கொஞ்சுவதில்லை!’ -மாமியார் குடும்பத்தைப் பதறவைத்த மூத்த மருமகன்

சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா

கொழுந்தியாளின் ஒன்றரை வயதுக் குழந்தையை கல்லால் தாக்கிக் கொன்ற போதை ஆசாமியை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

ராணிப்பேட்டை: `என் குழந்தைகளைக் கொஞ்சுவதில்லை!’ -மாமியார் குடும்பத்தைப் பதறவைத்த மூத்த மருமகன்

கொழுந்தியாளின் ஒன்றரை வயதுக் குழந்தையை கல்லால் தாக்கிக் கொன்ற போதை ஆசாமியை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

Published:Updated:
சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகேயுள்ள ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். கூலித்தொழிலாளி. இவரும் அருகிலுள்ள சிறுவளையம் கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற பெண்ணும் காதலித்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். தற்சமயம், ஒன்றரை வயதில் கபிலேஷ் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், கனிமொழி மீண்டும் கர்ப்பமடைந்தார். நிறைமாதம் ஆனதால், குழந்தை கபிலேஷுடன் தன் தாய் வீட்டுக்குப் பிரசவத்துக்காகச் சென்றிருந்தார் கனிமொழி. இந்தநிலையில்தான் அந்தக் கொடூரம் நிகழ்ந்தது. நேற்று முன்தினம் இரவு கனிமொழி, அவரின் தாயார் லட்சுமி, கனிமொழியின் அக்காள் காயத்திரி, தங்கை கார்த்திகா, அக்காள் கணவர் பிரசாந்த் ஆகியோர் ஒரே வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.

குழந்தையைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட பாறாங்கல்
குழந்தையைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட பாறாங்கல்

இரவு 11 மணியளவில், குழந்தை கபிலேஷ் திடீரென அலறித் துடிக்கும் சத்தம் கேட்டு அனைவரும் திடுக்கிட்டு எழுந்து பார்த்திருக்கிறார்கள். அப்போது, குழந்தை ரத்தக் காயங்களுடன் கிடப்பதைப் பார்த்து கதறி அழுதனர். உடனடியாக, அருகிலுள்ள புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் தூக்கிச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு விரைந்துள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தை கபிலேஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டான். குழந்தை இறந்துவிட்டதை மருத்துவர்களும் பரிசோதனை செய்து உறுதிப்படுத்தினர். குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதைத் தெரிந்துகொண்ட மருத்துவர்கள், நெமிலி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனடிப்படையில், போலீஸார் சம்பவ இடத்துக்கு நேற்று சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குழந்தை கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. உடனடியாக, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனாவும் சம்பவ இடத்துக்கு நேரில் பார்வையிட்டார். வேலூரிலிருந்து மோப்ப நாய் ‘சிம்பா’வும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சந்தேகத்தின்பேரில், கனிமொழியின் அக்காள் கணவரான பிரசாந்த்திடம் போலீஸார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தியபோது, கொலைக்கான காரணம் தெரியவந்தது. கட்டட வேலை செய்துவந்த மூத்த மாப்பிள்ளையான பிரசாந்த் மதுபோதைக்கு அடிமையாகி மாமியார் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். வேலைக்கும் செல்லாமல், மது குடிக்கவும் பணம் கேட்டு மனைவியை அடிப்பது, மாமியாரை மிரட்டுவது என அடாவடித்தனம் செய்திருக்கிறார் பிரசாந்த்.

கைதுசெய்யப்பட்ட பிரசாந்த்
கைதுசெய்யப்பட்ட பிரசாந்த்

நேற்று முன்தினம் இரவும் மதுபோதையில் வந்த பிரசாந்த், நிறைமாத கர்ப்பிணியான கொழுந்தியாள் கனிமொழியைப் பார்த்து, ‘சாப்பாடு செய்யாமல் போனையே நோண்டிக்கிட்டு இருக்க’ என்று சத்தம் போட்டிருக்கிறார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. ‘வெட்டிப்பையனுக்கு வீராப்பு கேட்குதா’ என்று மாமியாரும் மகளுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். ஏற்கெனவே, ‘`தன் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சுவதில்லை; ஆனால், கொழுந்தியாளின் குழந்தையை மட்டும் கொஞ்சுகிறார்கள்’ என்கிற கோபம் மாமியார் மீது பிரசாந்த்துக்கு இருந்துவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த், மாமியார் குடும்பத்திலிருப்பவர்களை அச்சுறுத்த கொழுந்தியாளின் ஒன்றரை வயது மகனை கொலை செய்ய நினைத்திருக்கிறார். அதற்காக வீட்டுக்கு வெளியில் கிடந்த பாறாங்கல்லைத் தூக்கிவந்து குழந்தை மீது போட்டிருக்கிறார். இவ்வளவு பெரிய கொடூரத்தை நிகழ்த்திய பின்னரும், பிரசாந்த்தை காப்பாற்றும் நோக்கத்தில் உண்மையை மறைக்கப் பார்த்திருக்கிறது, மாமியார் குடும்பம். மருத்துவர்கள் தகவல் சொல்லவில்லையெனில், குழந்தையை அடக்கம் செய்யும் வேலையிலும் ஈடுபட்டிருப்பார்கள் என்கிறது காவல்துறை. இதையடுத்து, பிரசாந்த்தைக் கைதுசெய்துள்ள நெமிலி போலீஸார், தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism