Published:Updated:

சுஷாந்த் மரண வழக்கு... போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு! - 3ம் நாள் விசாரணையில் ரியா கைது

போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின்போது ரியாவும் அவரின் சகோதரர் ஷோவிக்கும், போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புடைய சில பிரபலங்களின் பெயரைப் பட்டியலிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சுஷாந்த் சிங் மரண வழக்கு கடந்த சில தினங்களாகப் பல திருப்பங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. `சுஷாந்த் தற்கொலைக்கு அவரின் தோழி ரியாதான் காரணம்’ என்று குற்றம்சாட்டினார் சுஷாந்தின் தந்தை கிருஷ்ணகுமார் சிங். தனது மகனின் வங்கிக் கணக்கு விவரங்களை ரியா நிர்வகித்து, ஏராளமான நிதியை மாற்றிக்கொண்டதாக ரியா உள்ளிட்ட அவரின் குடும்பத்தார்மீது பீகார் மாநிலம், பாட்னா காவல் நிலையத்தில் புகாரளித்தார் சுஷாந்தின் தந்தை. இந்தப் புகாரின் அடிப்படையில் ரியா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து சுஷாந்த் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ரியா மீது பணப் பரிவர்த்தனை தொடர்பான புகார்கள் எழுந்ததை அடுத்து அமலாக்கத்துறை ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்களை ஆய்வு செய்தது. அப்போது ரியாவுக்குப் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் ரியா மீது வழக்கு பதிவு செய்தனர்.

Rhea chakrabarthy
Rhea chakrabarthy
Instagram.com / rhea_chakraborty
மகாராஷ்டிரா அரசின் எச்சரிக்கை... அமித் ஷாவுக்கு நன்றி!  Y+ பாதுகாப்பில் கங்கனா?

கடந்த செப்டம்பர் 4-ம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடிகை ரியாவின் சகோதரர் ஷோவிக் மற்றும் சுஷாந்த் சிங் இல்லத்தின் பராமரிப்பாளர் சாமுவேல் மிரண்டா ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு இருவரும் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 6-ம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்காக வந்தார் நடிகை ரியா. அங்கு அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆறு மணி நேர தீவிர விசாரணைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார் ரியா.

மீண்டும் நேற்று இரண்டாவது நாளாக ரியாவிடம் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து இன்று மூன்றாம் நாளாக விசாரணை தொடர்ந்த நிலையில் ரியா கைது செய்யப்படவுள்ளதாகத் தகவல் தெரிவித்திருக்கிறார் போதை தடுப்பு பிரிவு துணை இயக்குநர் கே.பி.மல்ஹோத்ரா. இது குறித்து அவர் கூறியதாவது...

ரியா இன்னும் முறையாக கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்வதற்கான பேப்பர் பணிகள் மற்றும் சம்பிரதாயப் பணிகள் நிறைவடைந்திருக்கின்றன.
கே.பி.மல்ஹோத்ரா
சுஷாந்த் வழக்கு: `4 சொட்டுகள் கலந்து குடிக்க வை!’ - ரியா வாட்ஸ்அப் உரையாடல் அம்பலப்படுத்திய சதி?

போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின்போது ரியாவும் அவரின் சகோதரர் ஷோவிக்கும், போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புடைய சில பிரபலங்களின் பெயரைப் பட்டியலிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட 25 பாலிவுட் பிரபலங்களின் பெயர்கள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சுஷாந்த் வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையாக சுஷாந்தின் தோழி ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்படவிருக்கிறார். ஆனால், தற்போது அவர் போதைப் பொருள் சம்பந்தமான வழக்கில்தான் கைதாகவிருக்கிறார். ரியாவிடம் சி.பி.ஐ தொடர்ந்து சுஷாந்த் மரண வழக்கு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு