Published:Updated:

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்; சூட்கேஸில் கிடந்த பிணம்; பெண் கொலையில் நடந்ததென்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மசாஜ் சென்டரில் புகுந்த ரௌடிக் கும்பல்!
மசாஜ் சென்டரில் புகுந்த ரௌடிக் கும்பல்!

அவருடைய கை கால்கள் துணியால் கட்டப்பட்டிருந்ததோடு, உடலும் அழுகிய நிலையில் இருந்திருக்கிறது.

கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் தேஜ்மண்டல். இவர் சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த பிரதாப் என்பவருடன் சேர்ந்து சேலம் பள்ளப்பட்டி, சங்கர் நகர் ஆகிய இடங்களில் பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர் ஆகியவற்றை நடத்திவந்திருக்கிறார். இவர்கள் இருவரும் சேலம் குமாரசாமிப்பட்டி மேற்கு தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவன், மனைவி எனச் சொல்லி வாழ்ந்துவந்தாகக் கூறுகிறார்கள். அருகிலேயே மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து இவர்களுடைய மசாஜ் சென்டரில் வேலை பார்த்துவந்த நிசி, ரிஷி ஆகிய பெண்கள், லுப்லு என்னும் ஆண் ஒருவரையும் குடிவைத்திருக்கிறார். இந்த நிலையில், அக்டோபர் 15-ம் தேதி சென்னையில் இருந்த பிரதாப் தொடர்ச்சியாக தேஜ்மண்டலுக்கு போன் செய்திருக்கிறார். போன், ஸ்விட்ச் ஆஃப் என்று வந்திருக்கிறது. உடனே வீட்டின் உரிமையாளரிடம் தகவலைச் சொல்லி வீட்டில் போய் பார்க்கச் சொல்லியிருக்கிறார். வீட்டின் உரிமையாளரான நடேசன் சென்று பார்த்தபோது வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதில் சந்தேகமடைந்த நடேசன் உடனே சேலம் அஸ்தம்பட்டி போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பெட்ரூம் சிலாப்பில் இருந்த ஒரு பெரிய சூட்கேஸில், தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டு அரை நிர்வாண நிலையில் சடலமாகச் சுருட்டி வைக்கப்பட்டுக் கிடந்திருக்கிறார். அவருடைய கை கால்கள் துணியால் கட்டப்பட்டிருந்ததோடு, உடலும் அழுகிய நிலையில் இருந்திருக்கிறது.

சிலாப்பில் இருந்த சூட்கேஸில் தேஜ்மண்டலின் சடலம்
சிலாப்பில் இருந்த சூட்கேஸில் தேஜ்மண்டலின் சடலம்

அதேநேரத்தில், தேஜ்மண்டல் அவரது வீட்டின் பக்கத்தில் குடிவைத்திருந்த அவருடைய மசாஜ் சென்டர் ஊழியர்கள் மூன்று பேர் வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவானது தெரியவந்திருக்கிறது. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் பார்த்தபோது, தலைமறைவான மூன்று பேரில் ஒரு பெண், ஓர் ஆண் ஆகியோர் அந்த வீட்டுக்குள் சென்று வந்ததும், அதற்குப் பிறகு வேறு யாரும் கொலையான தேஜ்மண்டலின் வீட்டுக்குச் செல்லாததும் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து தேஜ்மண்டல் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து போலீஸார், இக்கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படைகளை அமைத்து விசாரணையில் இறங்கினர். முதற்கட்டமாக சென்னையிலிருந்த பிரதாப்பை வரவழைத்து போலீஸார் விசாரிக்க, ``நாங்கள் இருவரும் கணவன், மனைவி அல்ல. சென்னையில் ஒரு மசாஜ் சென்டரில் வைத்துத்தான் தேஜ்மண்டல் எனக்கு அறிமுகமானார். நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு அவரை சேலத்துக்கு அழைத்துவந்து நானும், தேஜ்மண்டலும் சேர்ந்து மசாஜ் சென்டர்களை நடத்திவந்தோம். சமீபத்தில் நடந்த போலீஸ் ரெய்டில், என்னுடைய மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடந்ததால் என்மீது வழக்கு பதிவு செய்தனர். கைதாவதிலிருந்து தப்பிக்கவே சென்னையில் தலைமறைவாக இருந்தேன். இதற்கிடையேதான் தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டிருக்கிறார். தேஜ்மண்டல் கொலையில் எங்களுடைய மசாஜ் சென்டரில் வேலை பார்த்தவர்களுக்குத் தொடர்பிருக்க வாய்ப்பிருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

நிசி, லுப்லு இருவரும், தேஜ்மண்டலிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதை தேஜ்மண்டல் திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் ஒருவேளை தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலீஸார் கருதுகின்றனர். மேலும், மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்துவந்த தேஜ்மண்டல், தொழில்போட்டி காரணமாகவும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விவகாரம் குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். ``உயிரிழந்த தேஜ்மண்டலின் அறையிலிருந்த ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை இவற்றிலிருந்த அட்ரஸை வைத்து, இரண்டு தனிப்படை போலீஸார் பெங்களூரு சென்று விசாரித்தனர். அப்போது சம்பந்தப்பட்ட அந்த அட்ரஸ் போலியானது மட்டுமன்றி, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை இரண்டும் போலியாகத் தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், தலைமறைவாக இருக்கும் மூன்று பேருடைய பெயர்களுமே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சிசிடிவி காட்சியில் பதிவான உருவங்களை வைத்து மட்டுமே விசாரித்துவருகிறோம். தலைமறைவாக இருக்கும் மூவரின் செல்போன் எண்களும் பங்களாதேஷ் பார்டரில் கடைசியாக ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கிறது. தலைமறைவாக இருக்கும் மூவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டிவருகிறோம். அது கிடைத்த பின்னர்தான் வட மாநிலத்திலிருக்கும் அவர்களைப் பிடிக்க முடியும்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு