Published:Updated:

சேலம்: ஒருதலைக் காதல்; கத்தியைக் காட்டி பெண் பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது; மூவருக்கு வலை

பெண் பாலியல் வன்கொடுமை

வீடு புகுந்து கத்திமுனையில் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டதாரிப் பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் திருமணத்துக்கு மறுத்து மிரட்டல் விடுத்த வாலிபரை போலீஸார் கைதுசெய்தனர்.

சேலம்: ஒருதலைக் காதல்; கத்தியைக் காட்டி பெண் பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது; மூவருக்கு வலை

வீடு புகுந்து கத்திமுனையில் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டதாரிப் பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் திருமணத்துக்கு மறுத்து மிரட்டல் விடுத்த வாலிபரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
பெண் பாலியல் வன்கொடுமை

சேலம், மேச்சேரி அருகே கீரைக்காரனூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த சின்னண்ணன் மகன் சுபாஷ் சந்திர போஸ் என்பவர் ஒருதலையாகக் காதலித்துவந்திருக்கிறார். ஒருநாள், அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண் கேட்டிருக்கிறார். ஆனால், அவரின் பெற்றோர் திருமணத்துக்கு மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் சந்திரபோஸ் பட்டதாரிப் பெண்ணின் குடும்பத்தைப் பழிவாங்கப்போவதாகக் கூறி மிரட்டிவந்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒன்பது மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண், வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென உள்ளே புகுந்து சுபாஷ் சந்திரபோஸ், கதவைத் தாழிட்டு கத்திமுனையில் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

கைது
கைது

இதை வெளியில் சொன்னால் குடும்பத்தோடு கொலை செய்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோன அந்தப் பெண் வீட்டில் யாரிடம் கூறாமல் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் கர்ப்பமடைந்ததால், விஷயம் வீட்டுக்குத் தெரியவந்திருக்கிறது. கடந்த 5-ம் தேதி வயிற்றுவலியால் துடித்தவரை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மேற்கொண்டு பெண்ணிடம் விசாரித்ததில், சுபாஷ் சந்திர போஸ் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததைத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவரின் பெற்றோர் சம்பந்தப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ், அவரின் தந்தை சின்னண்ணன், தாயார் நல்லம்மாள் மற்றும் கூனாண்டியூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கோவிந்தன் ஆகியோரிடம் பேசி பெண்ணின் எதிர்காலத்தைக் கருதி தங்களது மகளைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த நான்கு பேரும் அவர்களை மிரட்டி அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது.

குற்றம்
குற்றம்

இது குறித்து மேச்சேரி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்தார். அதன்பேரில் எஸ்.ஐ சாந்தி விசாரித்து சுபாஷ் சந்திரபோஸ், அவரின் பெற்றோர், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கோவிந்தன் ஆகியோர்மீது கட்டாயப்படுத்தி, கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து, சுபாஷ் சந்திர போஸைக் கைதுசெய்திருக்கிறார். மேலும், இதில் தலைமறைவாக இருக்கும் நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.