Published:Updated:

சீர்காழி: கோயில் திருவிழா; இளம்பெண்ணைக் கிண்டல் செய்த இளைஞர்கள்-இரு தரப்பினரிடையே மோதல்; 3 பேர் கைது

மூவர் படுகாயம்

``17 வயது பெண்ணின் மீது தண்ணீரைத் தெளித்து கேலி செய்ததாக ஆறு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறோம்.” - போலீஸார்

சீர்காழி: கோயில் திருவிழா; இளம்பெண்ணைக் கிண்டல் செய்த இளைஞர்கள்-இரு தரப்பினரிடையே மோதல்; 3 பேர் கைது

``17 வயது பெண்ணின் மீது தண்ணீரைத் தெளித்து கேலி செய்ததாக ஆறு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறோம்.” - போலீஸார்

Published:Updated:
மூவர் படுகாயம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு இந்தக் கோயில் திருவிழா நடக்க, அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன் தாயுடன் சாமி தரிசனம் செய்ய வந்திருக்கிறார். அப்போது இளைஞர்கள் சிலர் அந்தப் பெண்னின் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.

 மூவர் படுகாயம்
மூவர் படுகாயம்

இது குறித்து அந்தப் பெண்ணின் தாயார், கிராமத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களிடம் புகார் தெரிவித்திருக்கிறார். இதைத்  தட்டிக்கேட்டதால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் மோதலாக உருவெடுத்தது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்களின் இரண்டு கடைகளை, மற்றொரு தரப்பினர் இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைத் தொடர்ந்து  நேற்று (16.08.2022)  இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். இதில் மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

மூவர் கைது
மூவர் கைது

இது குறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, ``மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பினர் மீதும்  வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். மாதானம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், சூரியமூர்த்தி, முருகன் உள்ளிட்ட மூவரைக் கைதுசெய்ததுடன் தலைமறைவான சங்கர் என்பவரைத் தேடிவருகிறோம். 17 வயது பெண்ணின் மீது தண்ணீரைத் தெளித்து கேலி செய்ததாக மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஆறு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறோம். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என்றனர்.