Published:Updated:

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு: விடுதி வார்டனுக்கு ஜாமீன் வழங்கி தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவு

தற்கொலை செய்துகொண்ட மாணவி படித்த பள்ளி

தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பள்ளியின் வார்டன் சகாயமேரிக்கு ஜாமீன் மற்றும் பள்ளி நிர்வாகியான ராக்கேல் மேரிக்கு முன்ஜாமீன் வழங்கி தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு: விடுதி வார்டனுக்கு ஜாமீன் வழங்கி தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவு

தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பள்ளியின் வார்டன் சகாயமேரிக்கு ஜாமீன் மற்றும் பள்ளி நிர்வாகியான ராக்கேல் மேரிக்கு முன்ஜாமீன் வழங்கி தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Published:Updated:
தற்கொலை செய்துகொண்ட மாணவி படித்த பள்ளி

தஞ்சாவூர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஹாஸ்டல் வார்டன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் வார்டனுக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும், பள்ளி நிர்வாகிக்கும் முன்ஜாமீன் வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டி, துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த அரியலுார் மாவட்டம், வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த,17 வயது மாணவி ஒருவர் பூச்சிமருந்து குடித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 19-ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் தற்கொலைக்கு அவர் தங்கிப் படித்த ஹாஸ்டல் வார்டன் மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதே காரணம் என சர்ச்சை எழுந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக இறப்பதற்கு முன்பு அந்த மாணவி பேசிய இரண்டு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மதம் மாறச் சொல்லி அழுத்தம் கொடுத்ததால்தான் மாணவி தற்கொலை செய்துகொண்டார் என பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பினர் இதைக் கையில் எடுத்து போராட்டம் நடத்தினர். `மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதால்தான் மகள் தற்கொலை செய்துகொண்டதாக’ மாணவியின் பெற்றோரும் புகார் எழுப்பினர்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவியின் தந்தை முருகானந்தம் வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணையில், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையக்குழுவினரும் 20-க்கும் மேற்பட்ட தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். மாணவி தற்கொலை விவகாரத்தில் இருவிதமான கருத்துகள் நிலவிய நிலையில் பாஜக சார்பில் அமைக்கப்பட்டிருந்த அக்கட்சியைச் சேர்ந்த நான்கு பேர்கொண்ட குழுவினரும் தஞ்சாவூர் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி ஹாஸ்டல் வார்டனான சகாயமேரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது நடைபெற்ற விசாரணையில் சகாயமேரிக்கு நீதிபதி மதுசூதனன் ஜாமீன் வழங்கினார். இதேபோல் பள்ளி நிர்வாகியான ராக்கேல்மேரி மீதும் புகார் எழுப்பப்பட்டு, அவரையும் கைதுசெய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர், பாஜக-வினர் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர்.

பாஜக  குழுவைச் சேர்ந்த விஜயசாந்தி
பாஜக குழுவைச் சேர்ந்த விஜயசாந்தி

இந்நிலையில், ராக்கேல் மேரியும் முன்ஜாமீன் கோரி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாகவும் நடைபெற்ற விசாரணையில் ராக்கேல்மேரிக்கும் முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism