Published:Updated:

தஞ்சாவூர்: அரசு மருத்துவமனை கழிவறைத் தொட்டிக்குள் பெண் சிசுக்கொலை! - சிசிடிவி மூலம் விசாரணை

அரசு மருத்துவமனை ( ம.அரவிந்த் )

யார், எதற்காகக் கழிவறையில் பெண் குழந்தையை அமுக்கிக் கொலை செய்தார்கள் எனத் தெரியவில்லை. சிசிடிவி-யில் பதிவான காட்சியில் இன்று காலை நைட்டி அணிந்த பெண் ஒருவர் தலையில் குல்லா, மாஸ்க் அணிந்தபடி கழிவறைக்குச் செல்வது பதிவாகியுள்ளது.

தஞ்சாவூர்: அரசு மருத்துவமனை கழிவறைத் தொட்டிக்குள் பெண் சிசுக்கொலை! - சிசிடிவி மூலம் விசாரணை

யார், எதற்காகக் கழிவறையில் பெண் குழந்தையை அமுக்கிக் கொலை செய்தார்கள் எனத் தெரியவில்லை. சிசிடிவி-யில் பதிவான காட்சியில் இன்று காலை நைட்டி அணிந்த பெண் ஒருவர் தலையில் குல்லா, மாஸ்க் அணிந்தபடி கழிவறைக்குச் செல்வது பதிவாகியுள்ளது.

Published:Updated:
அரசு மருத்துவமனை ( ம.அரவிந்த் )

தஞ்சாவூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் உள்ள கழிவறையில், தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கி, பிறந்த பெண் சிசு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தை கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதால், மருத்துவமனை வளாகத்தில் இருந்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைவைத்து போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கொலை குறித்து சிசிடிவி கேமராவில் ஆய்வு
கொலை குறித்து சிசிடிவி கேமராவில் ஆய்வு

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிலுள்ள கழிவறையைத் தூய்மைப் பணியாளர் ஒருவர் சுத்தம் செய்வதற்காக இன்று காலை சென்றிருக்கிறார். அப்போது கழிவறையில் இருந்த தண்ணீர் தொட்டி மேல் மூடி இல்லாமல் இருந்தது. அதற்குள் பெண் சிசு ஒன்று அமுக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடனடியாக டாக்டர்களிடம் தெரிவித்தார் அவர். இதைத் தொடர்ந்து டாக்டர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி கபிலன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் உள்ளிட்ட போலீஸார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிளை ஆய்வு செய்தும் விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. பிறந்த பெண் குழந்தை கழிவறைத் தொட்டிக்குள் அமுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸார் விசாரணை
போலீஸார் விசாரணை

இது குறித்து மருத்துவமனை வட்டாரத்தில் பேசினோம். ``நேற்று இரவோ அல்லது இன்று காலையிலோதான் இந்தச் சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளது. யார், எதற்காகக் கழிவறையில் பெண் குழந்தையை அமுக்கிக் கொலை செய்தார்கள் எனத் தெரியவில்லை. சிசிடிவி-யில் பதிவான காட்சியில் இன்று காலை நைட்டி அணிந்த பெண் ஒருவர் தலையில் குல்லா, மாஸ்க் அணிந்தபடி கழிவறைக்குச் செல்கிறார். அவருடைய வயிறு வீங்கியிருப்பதுபோல் தெரிகிறது. பின்னர் அந்தப் பெண் அரை மணி நேரத்துக்குப் பிறகுதான் கழிவறை இருக்கும் பகுதியிலிருந்து வெளியே வருகிறார்.

அவர்மீதும் போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அல்லது வேறு யாரேனும் செய்திருப்பார்களா என்கிற ரீதியிலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதன் முடிவிலேயே பிறந்த குழந்தையைக் கொலை செய்தவர் யார், குழந்தையின் தாய் யார் என்பது குறித்துத் தெரியவரும்” என்றனர். இந்தச் சம்பவத்தால்ல் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism