Published:Updated:

நிறுத்தப்பட்ட திருமணம்; முகநூலில் ஆபாச போட்டோ; விசிக முன்னாள் பிரமுகர் கைது!

விசிக-வின் முன்னாள் பிரமுகர் அறிவுடை நம்பி
விசிக-வின் முன்னாள் பிரமுகர் அறிவுடை நம்பி

கடந்த மே மாதம் 18-ம் தேதி திருமணத்துக்கான தேதி குறித்து அதற்கான ஏற்பாட்டைச் செய்துவந்தனர்.

தஞ்சாவூர் அருகேயுள்ள நாஞ்சிகோட்டை சாலைமறியல் பகுதியைச் சேர்ந்தவர் அறிவுடை நம்பி (41). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி செயலாளராக இருந்தார். சில மாதங்களுக்குமுன்பு தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இவருக்குத் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அறிவுடை நம்பியின் மனைவி அவரைப் பிரிந்து சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அறிவுடை நம்பி முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாகக் கூறி கடலூரைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவருடன் திருமணம் செய்துகொள்வதற்காக நிச்சயதார்த்தம் செய்திருந்தார். அந்தப் பெண்ணும் ஏற்கெனவே திருமணமானவர். அவருக்கும் ஒரு மகன் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த மே மாதம், 18-ம் தேதி திருமணத்துக்கான தேதி குறித்து அதற்கான ஏற்பாட்டை செய்துவந்தனர்.

`கோயிலில்வைத்து அத்துமீறினார்!’ - இந்து முன்னணி மாவட்டத் தலைவர் மீது எஸ்.பி அலுவலகத்தில் பெண் புகார்
திருமணம் நின்றதால் இளம்பெண் போட்டோவை ஆபாசமாக சித்திரித்த அறிவுடை நம்பி
திருமணம் நின்றதால் இளம்பெண் போட்டோவை ஆபாசமாக சித்திரித்த அறிவுடை நம்பி

இதையடுத்து திருமணத்துக்கு நான்கு நாள்களுக்கு முன்பு அறிவுடை நம்பி தன்னுடைய வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்துவந்தது திருமணம் செய்துகொள்ளவிருந்த பெண்ணுக்குத் தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண் திருமணத்தை நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அறிவுடை நம்பி, அந்தப் பெண்ணுடன் தான் எடுத்துக்கொண்ட புகைபடத்தை ஆபாசமாகச் சித்திரித்து, ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த ஜூலை மாதம் போலீஸில் புகார் அளித்த நிலையில் போலீஸ் வழக்கு பதிவு செய்து அறிவுடை நம்பியைத் தேடிவந்தனர்.

மேலும் புகார் அளித்த பெண்ணை,அறிவுடை நம்பி போனில் தொடர்ந்து மிரட்டி வந்திருக்கிறார். அதையும் அந்தப் பெண் போலீஸாருக்குப் புகாராக அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து அறிவுடை நம்பி தலைமறைவான நிலையில் தஞ்சாவூர் போலீஸ் எஸ்.பி ரவளிப்ரியா உத்தரவின்பேரில், வல்லம் அனைத்து மகளிர் போலீஸார், சென்னையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மறைந்திருந்த அறிவுடை நம்பியை கைதுசெய்தனர். மேலும் அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு