Published:Updated:

தஞ்சாவூர் : காதலுக்கு எதிர்ப்பு; மது குடிக்க அழைத்து போதையேற்றி கொலை செய்த இளைஞர்கள் கைது!

Murder
Murder

செல்வநாதனை அதிக அளவில் மது குடிக்க வைத்து போதையாக்கி மயக்க நிலைக்குச் செல்ல வைத்துள்ளனர். அதன் பிறகு சந்தோஷ், அமரேஷ் இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.

தஞ்சாவூரில், காதலுக்கு இடையூராக இருந்து கண்டித்து வந்த நபர் ஒருவரை இளம் பெண்ணை காதலித்த காதலன் அவரது நண்பர் என இருவரும் சேர்ந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

தஞ்சாவூர், பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(23) டிரைவராக வேலை செய்கிறார். அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதல் குறித்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்குத் தெரிய வந்த நிலையில், அவர்கள் பிள்ளையார்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வநாதன் (38) என்பவரிடம் காதல் குறித்துத் தெரிவித்து காதல் விவகாரத்தைக் கண்டிக்க கூறியுள்ளனர்.

இதையடுத்து, செல்வநாதன் அடிக்கடி சந்தோஷிடம் தகராறு செய்துள்ளார்.அந்த பெண்ணை காதலிக்கக்கூடாது எனவும் கூறி வந்துள்ளார். இதனால் செல்வநாதன் தன் காதலுக்கு இடையூராக இருப்பதாக சந்தோஷ் நினைத்தார். மேலும் செல்வநாதனைக் கொலை செய்துவிட்டால் காதலுக்குப் பிரச்னை இருக்காது எனக் கருதி கொலை செய்வதற்கும் திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில் சந்தோஷ், தனது நண்பரான பர்மா காலனியை சேர்ந்த அமரேஷ் (23) என்பவரைக் கூட்டு சேர்த்து கொண்டு கொலை சதியில் ஈடுப்பட்டுள்ளனர்.

செல்வநாதனுக்கு போன் செய்த சந்தோஷ், " என்னோட காதலை நான் விட்டுவிடுகிறேன் இனி அந்த பெண்ணை காதலிக்க மாட்டேன். ஜாலியா சரக்கு அடிக்கலாம் வர்ரீங்களா " என அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனை உண்மையென நம்பிய செல்வநாதனும் மது குடிக்க வந்துள்ளார். பின்னர், விளார் பைப்பாஸ் சாலை அருகே உள்ள தனியார் தங்கும் விடுதி மற்றும் குடியிருப்புகள் உள்ள பகுதியின் பின்புறமுள்ள திடலுக்கு அழைத்துச் சென்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அங்கு செல்வநாதனை அதிக அளவில் மது குடிக்க வைத்து போதையாக்கி மயக்க நிலைக்குச் செல்ல வைத்துள்ளனர். அதன் பிறகு சந்தோஷ்,அமரேஷ் இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளாக் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி கொலை செய்துள்ளனர். இது குறித்து தகவல் தஞ்சாவூர் தாலுக்கா போலீஸாருக்கு கிடைக்க வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதுடன் இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு