Published:Updated:

நள்ளிரவில் சாலையில் நிர்வாண ஓட்டம்... பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எல்லை மீறிய இளைஞர்கள்!

இரவு
இரவு ( representational image )

நண்பர்கள் இணைந்து, பொதுவெளியில் சர்ச்சைக்குரிய வகையில் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தஞ்சாவூரில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், நள்ளிரவு நேரத்தில் தனது நண்பரை நிர்வாணமாக்கி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. நண்பர்கள் இணைந்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய வகையில் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்
பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்

அந்த வீடியோவில், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே சில தினங்களுக்கு முன்பு இரவு, சாலையின் நடுவே 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கேக் வெட்டிய இளைஞர் உடம்பில் டிரெஸ் எதுவும் இல்லாமல் நிர்வாண கோலத்தில் இருந்தார். கேக் வெட்டியதுமே நிர்வாணமாக இருந்த இளைஞர்மீது அவரது நண்பர்கள் முகம் முழுவதும் கேக்கைப் பூசுகின்றனர்.

பின்னர் அந்த இளைஞர் நிர்வாணமாகவே சாலையில் ஓடுகிறார். அவரைத் துரத்திக்கொண்டே நண்பர்களும் செல்கின்றனர். பெரும் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டுக்கு வெளியே வந்துள்ளனர். அப்போது நிர்வாணமாக ஓடிய இளைஞரையும், அவரை சில இளைஞர்கள் துரத்திச் சென்றதையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பிட்ட தூரம் ஓடிய பிறகு மீண்டும் கேக் வெட்டிய இடத்துக்கே இளைஞர்கள் வந்துவிடுகின்றனர்.

மும்பை: `காட்டிக்கொடுத்த ரத்தக்கறை!’ - பிறந்த தன் குழந்தையை 7-வது மாடியிலிருந்து வீசிய சிறுமி!

பின்னர் நிர்வாணமாக இருக்கும் இளைஞரைத் தூக்கிக் கீழே போடுகின்றனர். அந்த இளைஞர் அப்படியே நிர்வாணமாகவே தரையில் படுத்திருக்கிறார். சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. பின்னர் நண்பர் ஒருவர் துண்டு ஒன்றைத் தர, அதை நிர்வாணமாக இருக்கும் இளைஞர் கட்டிக்கொள்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நண்பரை நிர்வாணமாக்கி, இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. இதைப்ல் பார்த்த அனைவரும்ம் அதிர்ச்சியடைந்தனர்.

பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்
பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்

இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``மது போதையின் உற்சாகத்தில் சாலையின் நடுவில் கூச்சலிட்டு கேக் வெட்டுதல்,பெரிய பட்டா கத்தியில் கேக் வெட்டுதல் போன்ற சர்ச்சைக்குரிய பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தஞ்சாவூரில் எல்லை மீறி நிர்வாணமாகக் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். அவர்கள் அனைவருமே கல்லூரி மாணவர்கள் எனத் தெரிகிறது. புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள், அறை எடுத்து தங்கியுள்ள வெளியூரைச் சேர்ந்த இளைஞர்கள் ஆகியோர் அருகேயுள்ள கல்லூரி ஒன்றில் படிக்கின்றனர்.

அவர்கள் தங்களது நண்பரின் பிறந்தநாளுக்காக இது போன்ற ஏற்பாட்டை செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அனைவரும் மது போதையில் இருந்ததால் உற்சாக மிகுதியில் இதைச் செய்ததாகத் தெரிகிறது. சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ முகம் சுளிக்கவைப்பதாக இருக்கிறது. போலீஸாரின் கவனத்துக்கும் இந்தச் சம்பவம் சென்றுள்ளது. ஆனால் இதுவரை வழக்கு எதுவும் பதியவில்லை எனத் தெரிகிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு