Published:Updated:

குடிக்கப் பணம் கேட்டுத் தகராறு செய்த மகன்; கூலிப்படையை ஏவிக் கொன்ற பெற்றோர்! - அதிர்ச்சி சம்பவம்

சொந்த மகனைக் கொலைசெய்த பெற்றோர்! - தெலங்கானா ( மாதிரிப் படம் )

தெலங்கானாவில், குடிப்பழக்கமுள்ள மகனை பெற்றோர் கூலிப்படை வைத்துக் கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலங்கானாவில், குடிப்பபழக்கமுள்ள மகனின் தொந்தரவு தாங்காத பெற்றோர், ரூ.8 லட்சதுக்கு கூலிப்படை வைத்து சொந்த மகனையே கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஊடகங்களில் வெளியான தகவலின்படி, கொலைசெய்யப்பட்டவர் சாய் ராம் (26) என்றும், அவரின் பெற்றோர் ஷத்ரிய ராம் சிங், ராணி பாய் என்றும் தெரியவந்திருக்கிறது.

இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் அக்டோபர் 18-ம் தேதிக்கு அடுத்தநாள், சூர்யாபேட்டையிலுள்ள முசியில் சாய் ராமின் உடல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், இந்தக் குற்றச் சம்பவத்துக்காகக் கொலையாளிகள் பயன்படுத்திய கார், அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியிருக்கிறது.

சொந்த மகனை கூலிப்படை வைத்து கொலைசெய்த பெற்றோர்! - தெலங்கானா
சொந்த மகனை கூலிப்படை வைத்து கொலைசெய்த பெற்றோர்! - தெலங்கானா

அதைத் தொடர்ந்து போலீஸார், இறந்தவரின் உடலை அடையாளம் காண சம்பந்தப்பட்ட பெற்றோரை அழைத்தபோது, அவர்களும் அதே காரை அங்கு கொண்டுவந்திருக்கின்றனர். இதில் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், பெற்றோர்தான் கூலிப்படை வைத்து மகனைக் கொன்றிருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து, இந்தக் கொலையைச் செய்த கூலிப்படையினர் ஐந்து பேர் எனத் தெரியவர, அவர்களில் நால்வரை போலீஸார் கைதுசெய்தனர். ஒருவர் மட்டும் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து தற்போது பெற்றோர், கைதுசெய்யப்பட்ட நால்வருடன் போலீஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

கைது
கைது

அது மட்டுமல்லாமல், இந்தச் சம்பவம் தொடர்பாக கொலைசெய்யப்பட்டவரின் குடும்பத்தினர், `மது அருந்தப் பணம் தரமறுத்த போது சாய் ராம், தன் பெற்றோரைத் தாக்கினார். ​​பெற்றோர் அவரை ஹைதராபாத்திலுள்ள மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பியும் பலனளிக்கவில்லை' என்று போலீஸிடம் கூறியிருக்கின்றனர்.

பின்னர் இது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரி ராம லிங்க ரெட்டி, ``தங்கள் மகனைக் கொல்ல ராணி பாயின் சகோதரர் சத்தியநாராயணனிடமிருந்து உதவி பெற்றனர். அதைத் தொடர்ந்து சத்யநாராயணா, மிரியாலகுடா மண்டலத்தைச் சேர்ந்த ஆர்.ரவி, டி.தர்மா, பி.நாகராஜு, டி.சாய் பி.ராம்பாபு ஆகியோரைக் கொலைசெய்யச் சேர்த்துக்கொண்டார்.

சொந்த மகனை கூலிப்படை வைத்து கொலைசெய்த பெற்றோர்! - தெலங்கானா
சொந்த மகனை கூலிப்படை வைத்து கொலைசெய்த பெற்றோர்! - தெலங்கானா

இதற்கிடையில் பெற்றோர், ரூ.8 லட்சம் பேசிவிட்டு... ரூ.1.5 லட்சத்தை முன்பணமாகச் செலுத்திவிட்டு, கொலை நடந்த மூன்று நாள்களுக்குப் பிறகு ரூ.6.5 லட்சத்தை தருவதாகக் கூறியிருக்கின்றனர். அதையடுத்து, அக்டோபர் 18-ம் தேதியன்று, சத்யநாராயணாவும், ரவியும் சாய் ராமை காரில் ஏற்றிக்கொண்டு கல்லேபள்ளியிலுள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று, அவருக்கு மது கொடுத்திருக்கின்றனர். பின்னர் அவர்கள், சாய் ராம் போதையில் இருந்தபோது அவரின் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.