Published:Updated:

வரதட்சணைக் கொடுமை; மனைவி பலி - கர்ப்பிணியை டாய்லெட் கிளீனர் குடிக்க வற்புறுத்திய கணவன் தலைமறைவு

தெலங்கானாவில் கர்ப்பிணி உயிரிழப்பு ( மாதிரி புகைப்படம் )

தெலங்கானாவில், மூன்று மாத கர்ப்பிணி மனைவியை டாய்லெட் கிளீனரைக் குடிக்க வற்புறுத்திய கணவன், தன் மனைவி உயிரிழந்ததையடுத்து தலைமறைவாகியுள்ளார்.

வரதட்சணைக் கொடுமை; மனைவி பலி - கர்ப்பிணியை டாய்லெட் கிளீனர் குடிக்க வற்புறுத்திய கணவன் தலைமறைவு

தெலங்கானாவில், மூன்று மாத கர்ப்பிணி மனைவியை டாய்லெட் கிளீனரைக் குடிக்க வற்புறுத்திய கணவன், தன் மனைவி உயிரிழந்ததையடுத்து தலைமறைவாகியுள்ளார்.

Published:Updated:
தெலங்கானாவில் கர்ப்பிணி உயிரிழப்பு ( மாதிரி புகைப்படம் )

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில் கர்ப்பிணியின் கணவன், மனைவியை டாய்லெட் கிளீனரைக் குடிக்கச் சொல்லி வற்புறுத்தியதையடுத்து, அப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில், கணவர் தருண் தலைமறைவாகிவிட்டதையடுத்து, அவரை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை, தருணுக்கும், அவரின் மனைவிக்குமிடையே வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரத்தில் தருண் தன் மனைவியை, கழிவறையைச் சுத்தம் செய்யும் அமிலத்தை (டாய்லெட் கிளீனர்) குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

போலீஸ்: சித்திரிப்புப் படம்
போலீஸ்: சித்திரிப்புப் படம்

பின்னர், அப்பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அப்பெண்ணின் பெற்றோர் அவரை நிஜாமாபாத் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருப்பினும், அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து, கடந்த புதன்கிழமை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உரியிழந்தார். அதைத் தொடர்ந்து, இறந்த பெண்ணின் பெற்றோர், ``தருண் தங்கள் மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், டாய்லெட் கிளீனரைக் குடிக்க வற்புறுத்திக் கொன்றதாகவும்' தருண் மீது போலீஸில் புகாரளித்துள்ளனர்.

பின்னர் இந்தப் புகாரின் அடிப்படையில், தருண், அவர் குடும்பத்தினர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302, 304-பி, மற்றும் 498-ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருவதாகவும், தலைமறைவான தருணைப் பிடிக்க, தனிப்படை அமைத்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism