Published:Updated:

`அன்று கம்பம்.. இன்று போடி!' - தேனி மக்களை உறையவைக்கும் தொடர் கொலைகள்

கொலை
கொலை

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவருகிறோம். தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதால், கொலைக்கான காரணம் விரைவில் தெரியவரும் என்கின்றனர் போலீஸார்!

சமீபத்தில், சுருளி அருவி செல்லும் தொண்டைமாந்துறை முல்லைப்பெரியார் ஆற்றின் கரையில், தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்டு உடல் மட்டும் சாக்கில் கட்டி வீசப்பட்டது. இச்சம்பவம் தேனி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதே போன்று, வெட்டப்பட்ட தலை மட்டும் அழுகிய நிலையில் நேற்று போடியில் மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட தலை
அழுகிய நிலையில் மீட்கப்பட்ட தலை
`மது போதையால் தொடர்ந்து பிரச்னை!'- தாய், தம்பியால் கம்பம் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது பரமசிவன் கோயில் மலை. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அப்பகுதியில், நேற்று, அழுகிய நிலையில் மனிதத் தலை ஒன்று கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. போடி நகர் காவல்நிலைய போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அழுகிய நிலையில் கிடந்த தலையை மீட்டனர். தொடர்ந்து, அப்பகுதியில் தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸார், உடல் ஏதும் அம்மலைப்பகுதியில் கிடக்கிறதா என்று தேடினர்.

கொலை
கொலை

இது தொடர்பாக நம்மிடையே பேசிய போலீஸார், ``அது ஒரு முதியவரின் தலை. வெட்டப்பட்டு மூன்று நாள்கள் இருக்கலாம். அது யாருடைய தலை என்று அடையாளம் தெரியாத அளவிற்கு அழுகியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தானா... அல்லது வெளி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டு இப்பகுதியில் தலையை வீசியுள்ளனரா என்று விசாரணை நடந்துவருகிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவருகிறோம். தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதால், கொலைக்கான காரணம் விரைவில் தெரியவரும்” என்றனர்.

`நீயா கொலை பண்ண..காமெடி பண்ணாத...!' - சரணடைய வந்தவரைத் திருப்பி அனுப்பிய தேனி போலீஸ்

மதுபோதையில் தாயிடமே தவறாக நடக்க முயன்ற கம்பத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரனை அவரது தாய் மற்றும் தம்பி இருவரும் சேர்ந்து கொலை செய்து கைகள், கால்கள், தலை ஆகியவற்றை தனித்தனியாக வெட்டி ஒவ்வொன்றையும் கம்பத்தின் வெவ்வேறு பகுதிகளில் வீசினர். இச்சம்பவம் தேனி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பரபரப்பு மாறுவதற்குள் மீண்டும் தலை துண்டிக்கப்பட்ட ஒரு சம்பவம் நடந்திருப்பது தேனி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு