Published:Updated:

நெருங்கும் தீபாவளி; தீயணைப்பு அலுவலகத்தில் ஏராளமான லஞ்சம்; திருவாரூரில் அதிரடி சோதனை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

சோதனையின்போது கணக்கில் வராத ரூ.1,20,000 பறிமுதல் செய்யப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அதிக அளவில் லஞ்சம் புழங்கும் இடங்கள் என்று சொன்னாலே... பத்திரப்பதிவுத்துறை, வருவாய்த்துறை, வட்டாரப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் அலுவலகங்கள்தான் மக்களின் நினைவுக்கு வரும். பொதுமக்களோடு அதிகம் தொடர்பில்லாத தீயணைப்புத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபடுவதென்பது, `இங்கேயுமா லஞ்சம் புழங்கும்!' என மக்கள் மத்தியில் வியப்பான கேள்வியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை

திருவாரூரிலுள்ள தீயணைப்புத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின்போது, கணக்கில் வராத ரூ.1,20,000 பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து தியணைப்புத்துறை அலுவலரிடமும் ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்றது.

திருவாரூர் நேதாஜி சாலையில், திருவாரூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகம் செயல்பட்டுவருகிறது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, திரையரங்குகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமான அளவுக்குச் செய்யப்பட்டிருக்கின்றனவா என தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கினால் அவை செயல்பட முடியும் என்பது விதிமுறை.

லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை; அதிகாரி மற்றும் திமுக, அதிமுக பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு
தீயணைப்புத்துறை
தீயணைப்புத்துறை

தீபாவளி சமயத்தில் பட்டாசுக் கடைகள் தொடங்கக்கூடியவர்கள், தீயணைப்புத்துறை அலுவலகத்தைத்தான் முதன்மையாகச் சார்ந்திருக்கவேண்டியிருக்கிறது. தீ தடுப்பு மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ் வழங்க, திருவாரூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகத்தில் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறையினருக்கு ரகசியப் புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, திருவாரூர் லஞ்ச ஒழிப்புக் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் ஆய்வாளர்கள் தமிழ்செல்வி, சித்ரா மற்றும் காவலர்கள் அடங்கிய டீம், சோனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது கணக்கில் வராத 1,20,000 ரூபாய் பணம் சிக்கியது. இது குறித்து தீயணைப்பு உதவி அலுவலர் முருகேசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு