Published:Updated:

என்கவுன்ட்டர்: 7 கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி; சுட்டுக்கொலை! நடந்தது என்ன?

என் கவுண்டரில் கொலை செய்யப்பட்ட துரைமுருகன்
News
என் கவுண்டரில் கொலை செய்யப்பட்ட துரைமுருகன்

7 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரைமுருகன், தூத்துக்குடி கோவளம் கடற்கரைப் பகுதியில் என்கவுன்ட்டரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியைச் சேர்ந்தவர் துரைமுருகன். இவர்மீது 7 கொலை வழக்குகள் உட்பட வழிப்பறி, திருட்டு, கொலை மிரட்டல் என 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், துரைமுருகன் கடந்த 5-ம் தேதி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தில் நடந்த கோயில் திருவிழாவுக்குத் தனது நண்பர் விஜய்யுடன் சென்றிருக்கிறார். அங்கு, விஜய்யின் நண்பரான ஜெகதீஷ் என்பவருடன் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தியிருக்கின்றனர்.

ரவுடி துரைமுருகனால் தாக்கப்பட்ட போலீஸார்
ரவுடி துரைமுருகனால் தாக்கப்பட்ட போலீஸார்

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் துரைமுருகனும், விஜய்யும் ஜெகதீஷைக் காரில் கடத்திச் சென்று அவரைக் கொலை செய்து திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் ஜெகதீஷின் உடலை புதைத்து விட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர். இந்த நிலையில், ஜெகதீஷ் காணாமல் போனது தொடர்பாக அவருடைய தந்தை முருகேசன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து நாகராஜபிரபு தலைமையிலான தனிப்படைப் பிரிவு போலீஸார் விஜய் மற்றும் துரைமுருகனைத் தேடி வந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில் தூத்துக்குடி முத்தையாபுரம் கோவளம் கடற்கரைப் பகுதியில் துரைமுருகன் பதுங்கியிருந்ததாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர் டேவிட் ஆகியோர் கோவளம் கடற்கரைப் பகுதிக்குச் சென்றனர். அப்பகுதியில் உள்ள உப்பள கட்டடத்தில் பதுங்கியிருந்த துரைமுருகனை போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது துரைமுருகன், போலீஸாரை அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றிருக்கிறார் என காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கழுத்து, தலை உட்பட 3 இடங்களில் குண்டு பாய்ந்து துரைமுருகன் உயிரிழந்திருக்கிறார்.

Tamilnadu police encounter
Tamilnadu police encounter
Vikatan

தூத்துக்குடி, ஓடைகரைப்பகுதியில் சொந்த வீட்டில் குடியிருந்து வந்தார் துரைமுருகன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிமுருகன் என்பவருடன் ஏற்பட்ட தகராறில் ரஜினிமுருகன் உள்ளிட்ட சிலரைக் கொலை செய்து வீட்டிற்குள் புதைத்து வைத்த வழக்கில் துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கூட்டாம்புளியில் குடும்பத்துடன் குடியேறினார். துரைமுருகனின் அண்ணன்களான ரகுராமன், ஜெயராமன் ஆகியோர் ரஜினிமுருகன் ஆதரவாளர்களால் பழிக்குப் பழியாகக் கொலை செய்யப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து பல்வேறு கொலை வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்தார் துரைமுருகன். கடந்த சில நாள்களுக்கு முன்னர்தான் சிறையில் இருந்தது வெளியே வந்தார். தற்போது பாவூர்சத்திரம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில், என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார், ”பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய துரைமுருகன் முத்தையாவும் கோவளம் கடற்கரையில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது அவரைச் சுற்றி வளைத்த நாகராஜபிரபு, ஆயுதப்படை காவலர் டேவிட் போலீஸார் இருவரும் சரணடையும்படி கூறியிருக்கின்றனர்.

என்கவுன்ட்டர் நடைபெற்ற கடற்கரைப்பகுதி
என்கவுன்ட்டர் நடைபெற்ற கடற்கரைப்பகுதி

இதை ஏற்க மறுத்த துரைமுருகன், போலீஸாரை அரிவாளால் வெட்டியிருக்கிறார். இதில், போலீஸார் இருவருக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து துரைமுருகனின் மூர்க்கத்தனமான மோதலால் தற்காப்புக்காக போலீஸார், துரைமுருகனை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து போலீஸாரைத் தாக்குவதற்காக துரைமுருகன் பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட சில ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது” என்றார். கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த என்கவுன்ட்டரால் தூத்துக்குடியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதனால், தூத்துக்குடியில் பல இடங்களில் பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.