Published:Updated:

`சாப்பிடுவது இங்கே, மூத்த பிள்ளைக்கு அதிக சொத்தா?' கேள்வி கேட்ட மகளின் வாயை வெட்டிய தந்தை தற்கொலை!

மகள் கீர்த்தனா அப்பாவுக்குச் சாப்பாடு பரிமாறும்போது திட்டிக்கொண்டே பரிமாறியிருக்கிறார். கடுப்பான மூர்த்தி அருகில் கிடந்த அரிவாள்மனையால் மகளின் வாயில் வெட்டிவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை, அதவத்தூர் சக்தி நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரின் மூத்த மனைவி பிருந்தாதேவியின் மகன் அருள் ராஜா. இவர் வாசன் சிட்டி என்னும் பகுதியில் வசித்துவருகிறார். மூத்த மனைவி இறந்ததால், இரண்டாவதாக லதா என்பவரை மூர்த்தி திருமணம் செய்துகொண்டார்.

திருச்சி மலைக்கோட்டை -
திருச்சி மலைக்கோட்டை -

இவர்களுக்கு பிரபாகரன் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். உறவினர்கள் வீட்டு விசேஷத்துக்காக நேற்று காலை லதா, பிரபாகரனுடன் மூர்த்தியின் சொந்த ஊரான கொத்தட்டைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியிருக்கிறார்.

அப்போது வீட்டின் கதவைத் திறந்தபோது கணவர் மூர்த்தி தூக்கில் தொங்கியபடி கிடந்திருக்கிறார். கீர்த்தனா வாயில் வெட்டுக் காயத்துடன் சேரில் மயங்கியநிலையில் கிடந்திருக்கிறார். இந்தச் சம்பவத்தைப் பார்த்தும் லதா கதறி அழுதார். அவரின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சோமரசம்பேட்டை போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

வெட்டுக் காயத்துடன் கீர்த்தனா
வெட்டுக் காயத்துடன் கீர்த்தனா
ராதாபுரம்: கஞ்சா போதை...`ஓசி’ சிகரெட் தராததால் அரிவாள் வெட்டு! -ஆம்புலன்ஸ் டிரைவருக்கு நேர்ந்த சோகம்

காவலர்கள் மூர்த்தியின் உடலைக் கைப்பற்றியதோடு, உயிருக்குப் போராடிய கீர்த்தனாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். என்ன நடந்தது என்று வழக்கை விசாரித்து வரும் போலீஸாரிடம் பேசினோம். ``உயிரிழந்த மூர்த்திக்கு கொத்தட்டை பகுதியில் சொந்த நிலம் இருந்திருக்கிறது. அவருக்கு இரண்டு மனைவி என்பதால், இரு குடும்பத்தின் பிள்ளைகளுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒருகட்டத்தில் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மூர்த்தி முதல் மனைவி இறந்தநிலையில் மூத்த மகன் அருள் ராஜாவுக்கு நான்கு ஏக்கர் நிலத்தையும், இரண்டாவது தாரமான லதாவுக்கு மூன்று ஏக்கர் நிலத்தையும் உயில் எழுதிவைத்திருக்கிறார். `சாப்பிடுவது தங்குவதெல்லாம் எங்ள் வீட்டில். அப்படியிருக்க, முதல் தாரத்து மகனுக்கு எதற்காக அதிக சொத்தை எழுதிவைத்தீர்கள்’ என மூர்த்தியிடம் சாப்பாடு பரிமாறும்போது கேட்டிருக்கிறார் இரண்டாவது தாரத்தின் மகள் கீர்த்தனா

ஆத்திரமடைந்த மூர்த்தி அருகில் கிடந்த அரிவாள்மனையால் கீர்த்தனாவை வாயில் வெட்டிவிட்டு, ``என்னால்தானே இந்தப் பிரச்னை" என தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்கிறார்கள். கீர்த்தனாவை வெட்டிய அரிவாள்மனையை பீரோவின் பின்புறத்தில் வைத்திருக்கிறார். அதை நாங்கள் கைப்பற்றியிருக்கிறோம்" என்றார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு