Published:Updated:

`திருமணம் செய்வதாகக்கூறி 5 ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்தார்!'-இளம்பெண் போலீஸில் `பகீர்' புகார்

பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

திருமணம் செய்துகொள்வதாகக்கூறி தன்னை ஐந்து வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்துவந்ததாக, இளம்பெண் அளித்தப் புகாரின்பேரில் இளைஞர் ஒருவரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில், திருமணம் செய்துகொள்வதாகக்கூறி தன்னை ஐந்து வருடங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக, இளம்பெண் அளித்தப் புகாரின்பேரில் இளைஞர் ஒருவரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்திரிப்பு படம்

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கடந்த வியாழன்று, திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதியளித்து கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தன்னை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தற்போது திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதாகவும் போலீஸில் புகாரளித்திருந்தார்.

மேலும் அந்த நபர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீஸார், குற்றம்சாட்டப்பட்ட நபரை நேற்று கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

கைது
கைது

பின்னர் இது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரி ராஜேஷ் மிஸ்ரா, ``கைதுசெய்யப்பட்ட நபர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் பாலியல் வன்கொடுமை, துஷ்பிரயோகம், கொலை மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. புகாரளித்த பெண், மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவித்தார்.