Election bannerElection banner
Published:Updated:

மணல் கொள்ளை... தடுத்த போலீஸார்மீது பெட்ரோல் குண்டுவீச்சு! - வேதாரண்யத்தில் அதிர்ச்சி

பெட்ரோல் குண்டுவீச்சு
பெட்ரோல் குண்டுவீச்சு

காவல் நிலையம் அருகே வரும்போது டிராக்டரை மீட்பதற்காக டிராக்டரின் உரிமையாளருக்கு வேண்டியவர்கள் மூன்று பேர் திடீரென டிராக்டரை வழி மறைத்து போலீஸ்காரர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

வேதாரண்யம் தாலுகா, காரியாபட்டினத்தில் மணல் கடத்தல் டிராக்டரைப் பிடித்து, காவல் நிலையத்துக்கு டிராக்டரை ஓட்டிவந்த தனிப்படை போலீஸார் மீது பெட்ரோல் குண்டுவீசி டிராக்டரை மீட்க முயற்சி நடந்துள்ளது. பெட்ரோல் குண்டுவீச்சில் போலீஸ்காரர் காயம் அடைந்து, வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருப்பது  பெரும்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியிருக்கிறது.

பெட்ரோல் குண்டுவீச்சு
பெட்ரோல் குண்டுவீச்சு

வேதாரண்யம் தாலுகா, கரியாப்பட்டினத்தைச்  சேர்ந்தவர் சக்தி. டிராக்டர் ஓனர். இவரது வண்டியில் டிரைவராக வேலைபார்ப்பவர் தென்னம்புலத்தைச் சேர்ந்த வீரமணி. இவர் நேற்றிரவு கத்திரிபுலம் என்ற கிராமத்திலிருந்து எவ்வித அரசு அனுமதியும் இல்லாமல் கலவை மண்ணை டிராக்டரில் கடத்திவந்திருக்கிறார். அப்போது நாகையிலிருந்து வந்த தனிப்பிரிவு போலீஸார் டிராக்டரை மடக்கிப் பிடித்தனர். அதனால் டிராக்டரை விட்டுவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

நடுரோட்டில் நின்றிருந்த டிராக்டரை தனிப்படை போலீஸார், தீன் என்ற காவலர்  மூலம் கரியாப்பட்டினம்  காவல் நிலையத்துக்கு டிராக்டரை மணலோடு ஓட்டிவரப் பணித்தனர். அருகில் மற்றொரு காவலர் வெற்றிவேல் என்பவர்  அமர்ந்திருந்தார். காவல் நிலையம் அருகே வரும்போது டிராக்டரை மீட்பதற்காக டிராக்டரின் உரிமையாளருக்கு வேண்டியவர்கள் மூன்று பேர் திடீரென டிராக்டரை வழிமறைத்து போலீஸ்காரர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

இதில் போலீஸ்காரர் தீன் உடம்பில் தீப்பிடித்து கால் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டுகளை வீசிய மூன்று பேரும் தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த போலீஸ்காரர் தீன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மணல் விற்பனை போட்டியால் ஒருவருக்கொருவர் காட்டிக்கொடுப்பதாகவும், காரியாபட்டினம் காவல் நிலைய போலீஸார் மணல் கடத்தலுக்கு உடந்தையாகப் பெரும்தொகை பெற்றுவருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இந்தச் சம்பவத்தால் ஏற்கெனவே காரியாபட்டினம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த தனிப்பிரிவு ஏட்டு வேதமூர்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர், வாய்மேடு காவல்நிலைய ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் ஆயுதப்படைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் குண்டுவீச்சு
பெட்ரோல் குண்டுவீச்சு

டிராக்டர் உரிமையாளர் சக்தி, டிரைவர் வீரமணி, பெட்ரோல் குண்டு வீசியதாக கோபி, கோடிநாதன், கலையரசன்  ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர் போலீஸார். டிரைவர் வீரமணி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு