Published:Updated:

தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற ப்ளஸ் டூ மாணவி; அதிர்ச்சிப் பின்னணி!

இளைய மகள் அவலூர்பேட்டை பகுதியிலுள்ள பள்ளியில் 12- ம் வகுப்பு படித்துவருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகேயுள்ள அவலூர்பேட்டையை அடுத்த கோவில்புரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு வயது 40. மாற்றுத்திறனாளியான இவர், வேன் மூலம் காய்கறி வியாபாரம் செய்துவந்திருக்கிறார். இவரின் மனைவி 12 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இவருக்கு 20 மற்றும் 17 வயதுகளில் இரு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள், சென்னையிலுள்ள தனியார் கடையில் வேலை செய்துவருவதாகச் சொல்கிறார்கள். இளைய மகள் அவலூர்பேட்டை பகுதியிலுள்ள பள்ளியில் ப்ளஸ் டூ படித்துவருகிறார்.

கொலை
கொலை
தென்காசி:`அம்மா, அப்பாவைப் பார்த்துவிட்டு வருகிறேன்!’-காதல் திருமணம் செய்த மகளை வெட்டிக் கொன்ற தந்தை

தன் இளைய மகளுடன் வசித்துவந்திருக்கிறார் குமரன். நேற்று முன்தினம் (20.09.2021) இரவு 7 மணியளவில், 'தன் தந்தை கத்தியால் குத்தப்பட்டு இறந்துகிடப்பதாக' அக்கம் பக்கத்தினரிடம் பதற்றத்துடன் கூறியிருக்கிறார் மாணவி. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் குமரனின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கு யார் காரணம் எனக் காவல்துறை விசாரித்தபோது, ``தந்தையை குத்திக் கொன்றது நான்தான்" என குமரனின் இளையமகள் ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

அவலூர்பேட்டை காவல் நிலைய வழக்குகளைக் கூடுதலாக கவனித்துவரும் சத்தியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளரிடம் பேசினோம். ``சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் நடைபெற்றிருக்கிறது. மகளிடம், குமரன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் தற்காப்புக்காக அந்த மாணவி கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அந்த மாணவி 18 வயதுக்கு உட்பட்டவர் என்பதால் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறோம். விசாரணை நடைபெற்றுவருகிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு