Published:Updated:

விழுப்புரம்: இரவில், ஓடும் அரசுப் பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை!-நடத்துனர், ஓட்டுநர் சஸ்பெண்ட்

காணை காவல் நிலையம்
News
காணை காவல் நிலையம்

ஓடும் அரசுப் பேருந்தில் நடத்தன்ர் மூலம் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகவும், இதற்கு ஓட்டுநர் உடந்தையாக இருந்ததாகவும் இளம்பெண் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், சென்னையிளூள்ள ஒரு கல்லூரியில் இளங்கலைப் படிப்பு படித்துவருகிறார். இந்நிலையில், தன் ஊருக்கு செல்வதற்காக நேற்று (09.12.2021) இரவு சென்னையிளீருந்து விழுப்புரம் வந்திருக்கிறார் அந்த இளம்பெண். பின்னர், விழுப்புரத்திலிருந்து தன் ஊரின் வழியே கொத்தமங்கலம் செல்லும் அரசு நகர்ப்புற பேருந்தில் ஏறியிருக்கிறார். அந்தப் பேருந்தில் குறைவான எண்ணிக்கையிலேயே பயணிகள் இருந்திருக்கிறார்கள்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image

கொத்தமங்கலத்துக்கு முன்னதாகவே உள்ள தனது ஊருக்கு பயணச்சீட்டு கேட்டுப் பெற்றிருக்கிறார். ஆனால், அந்தப் பெண் இறங்கவேண்டிய நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளனர். ஓடிக்கொண்டிருந்த அந்தப் பேருந்து கொத்தமங்கலம் ரயில்வே தரைப்பாலம் அருகே சென்றபோது பேருந்து நடத்தனர் அந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் அதிர்ந்த அந்த இளம்பெண், நேற்று நள்ளிரவே தன் உறவினர்களுடன் காணை காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார். தான் கூறிய பேருந்து நிறுத்தத்தில் தன்னை இறக்கிவிடாமல் பேருந்தை இயக்கிச் சென்றதாகவும், பேருந்து நடத்தனர் தனக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகவும், இதற்கு ஓட்டுநரும் உடந்தையாக இருந்ததாகவும் புகார் அளித்துள்ளார் அந்த இளம்பெண்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தச் சம்பவம் குறித்து, அரசுப் பேருந்து நடத்துனர் சிலம்பரசன், ஓட்டுநர் அன்புச்செல்வனிடம் விசாரணை நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. ஓடும் பேருந்தில், இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, காணை காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். "பேருந்து நடத்தனர், ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. விசாரணையின் முடிவிலேயே என்னவென்று தெரியவரும்" என்றனர்.

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்தனர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.