Published:Updated:

விழுப்புரம்: `மூன்று மாத கர்ப்பம்!’ குடிபோதைத் தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

விழுப்புரம்
விழுப்புரம்

மதுபோதையில் பெற்ற மகளையே மிரட்டி, தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பமாக்கிய தந்தையை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது விழுப்புரம் மாவட்ட காவல்துறை.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). 42 வயதாகும் இவர் மரம் ஏறும் கூலித் தொழிலாளி. இவரின் மகள் அதே ஊரிலுள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருகிறார். தற்போது பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டில் ஆன்லைன் கல்வி படித்துவருகிறார்.

விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்
விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்

தாயும் கூலி வேலைக்குச் செல்பவர் என்பதால், பெரும்பாலான நேரம் சிறுமி வீட்டில் தனியாகவே இருந்திருக்கிறார். கடந்த மூன்று மாதங்களாகச் சிறுமிக்கு மாதவிடாய் பிரச்னை இருந்ததால், அவரின் தாய் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே பரிசோதித்துப் பார்த்தபோது, சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இது குறித்து விசாரித்தபோது, மூன்று மாதங்களுக்கு முன்னர் மதுபோதையில் வீட்டுக்கு வந்த தந்தை தன்னை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன் பிறகு பலமுறை தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் அவரின் தாய்.

கஞ்சா போதை; பாலியல் வழக்கில் சிக்கிய அப்பா, மகன் - 19 வயது மகளுக்குத் தந்தையால் நடந்த கொடூரம்!

தொடர்ந்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில், செந்திலை போக்சோ வழக்கின் கீழ் கைதுசெய்த போலீஸார் மருத்துவப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு