Published:Updated:

விழுப்புரம்: மது அருந்தப் பணம் கேட்டுத் தகராறு; பணம் தராத தாயின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன்!

உயிரிழந்த மூதாட்டி, விஜயகுமார்

மது அருந்துவதற்கு வயதான தாய் பணம் தர மறுத்ததால், அவரின் தலையில் குழவிக்கல்லைப்போட்டு மகன் கொலைசெய்திருக்கும் சம்பவம் விக்கிரவாண்டி அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: மது அருந்தப் பணம் கேட்டுத் தகராறு; பணம் தராத தாயின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன்!

மது அருந்துவதற்கு வயதான தாய் பணம் தர மறுத்ததால், அவரின் தலையில் குழவிக்கல்லைப்போட்டு மகன் கொலைசெய்திருக்கும் சம்பவம் விக்கிரவாண்டி அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
உயிரிழந்த மூதாட்டி, விஜயகுமார்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள எஸ்.எஸ்.ஆர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி பாஞ்சாலி. இவர், தன் மகன் விஜயகுமார் என்பவருடன் வசித்துவந்திருக்கிறார். அவ்வப்போது கூலி வேலைக்குச் செல்லும் விஜயகுமார், அதீத மதுப் பழக்கத்துக்கு அடிமையானதாகத் தெரிகிறது. சில சமயம் மது அருந்துவதற்குப் பணம் இல்லையெனில், தாய் பாஞ்சாலியிடம் வாக்குவாதம் செய்து பணத்தைப் பிடுங்கிச் சென்று மது அருந்துவாரம்.

விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி

அதேபோல நேற்றைய தினமும் (08.09.2022) பாஞ்சாலியிடம் மது அருந்துவதற்குப் பணம் கேட்டு சண்டையிட்டாராம் விஜயகுமார். பாஞ்சாலியோ, தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், அவரை பலமாகத் தாக்கிதோடு அருகிலிருந்த அம்மிக்குழவிக் கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டுக் கொலை செய்திருக்கிறார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, அவர் இறந்தநிலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் விக்கிரவாண்டி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த விக்கிரவாண்டி போலீஸார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததோடு, விஜயகுமாரைக் கைதுசெய்தனர்.

உயிரிழந்த நிலையில் மூதாட்டி
உயிரிழந்த நிலையில் மூதாட்டி

மது அருந்துவதற்குப் பணம் கேட்டுத் தராததால், தாயின்மீது ஆத்திரமடைந்த மகன், தாயின் தலையிலேயே அம்மிக்குழவியைப் போட்டுக் கொலைசெய்திருக்கும் சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.