Published:Updated:

விலங்குகளை வேட்டையாட, நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கியவர் கைது! - காட்டுப்பன்றி இறைச்சியும் பறிமுதல்

நாட்டு வெடிகுண்டுகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் 12 நாட்டு வெடிகுண்டுகளைப் பதுக்கிவைத்திருந்தவர் கைதுசெய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்து காட்டுப்பன்றி இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.

விலங்குகளை வேட்டையாட, நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கியவர் கைது! - காட்டுப்பன்றி இறைச்சியும் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் 12 நாட்டு வெடிகுண்டுகளைப் பதுக்கிவைத்திருந்தவர் கைதுசெய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்து காட்டுப்பன்றி இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Published:Updated:
நாட்டு வெடிகுண்டுகள்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, புலி, காட்டெருமை, காட்டுப்பன்றி, மிளா, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்துவருகின்றன. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள செம்பட்டையன்கால் பகுதியில் வசிக்கும் கார்த்திக் ராஜா (23) என்பவர், வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளைப் பதுக்கிவைத்திருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கிருஷ்ணன்கோயில் காவல் நிலைய போலீஸ் உதவியுடன் செம்பட்டையன்கால் பகுதியிலுள்ள கார்த்திக் ராஜா வீட்டுக்குச் சென்று வனத்துறையினர் சோதனை நடத்தினர்.

காட்டுப்பன்றி இறைச்சி
காட்டுப்பன்றி இறைச்சி

அப்போது வீட்டில் ஒரு வாளியில், வனவிலங்குகளைக் கொல்வதற்காக 12 நாட்டு வெடிகுண்டுகளை கார்த்திக் ராஜா பதுக்கிவைத்திருந்ததும், சமையலறையில் வேட்டையாடப்பட்ட காட்டுப்பன்றியின் இறைச்சியைச் சமைத்து வைத்திருந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் மூலப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத் தொடர்ந்து, கார்த்திக் ராஜாவைக் கைதுசெய்த வனத்துறையினர், அவரிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகள், வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்கள் மற்றும் சமைக்கப்பட்ட காட்டுப்பன்றி இறைச்சி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

கார்த்திக் ராஜா
கார்த்திக் ராஜா

இது குறித்து வனத்துறை அதிகாரியிடம் பேசினோம். "வனத்துறை அலுவலகத்துக்கு எடுத்துவரப்பட்ட வெடிகுண்டுகள் அதிகாரிகள் முன்னிலையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணர்களால் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன. கைதுசெய்யப்பட்ட கார்த்திக் ராஜா மீது ஏற்கெனவே இது போன்று வன விலங்குகளை வேட்டையாடிதாகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது குறித்துத் தகவல் தந்தால், தகவல் தந்தவர்களின் விவரம் பாதுகாப்பாக வைக்கப்படும். மேலும் குற்றவாளிகள்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism