Published:Updated:

சிறுமியை வைத்து பாலியல் தொழில்; ஓய்வுபெற்ற எஸ்.ஐ உள்ளிட்ட 9 பேர் கைது - நடந்தது என்ன?

பாலியல் தொழில் ( சித்திரிப்புப் படம் )

கரூர் அருகே சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த 3 பெண் புரோக்கர், ஐந்து இளைஞர்கள் உள்ளிட்ட 8 பேர் போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சிறுமியை வைத்து பாலியல் தொழில்; ஓய்வுபெற்ற எஸ்.ஐ உள்ளிட்ட 9 பேர் கைது - நடந்தது என்ன?

கரூர் அருகே சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த 3 பெண் புரோக்கர், ஐந்து இளைஞர்கள் உள்ளிட்ட 8 பேர் போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
பாலியல் தொழில் ( சித்திரிப்புப் படம் )

கரூர் அருகே தொழிற்பேட்டை பகுதியில் சிறுமியைவைத்து பாலியல் தொழில் செய்துவருவதாக, பொதுமக்கள் மூலமாக குழந்தைகள் நல அலுவலகத்துக்குப் புகார் சென்றிருக்கிறது. இந்தப் புகார் குறித்து, குழந்தைகள் நல அலுவலர் கனகவல்லி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் அளித்தார். அந்தத் தகவலின் அடிப்படையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்பேரில், தனிப்படைக் குழு அமைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் ரகசிய விசாரணையை மேற்கொண்டனர்.

இதில், மூன்று பெண் புரோக்கர்கள், ஐந்து இளைஞர்கள் உட்பட எட்டு பேரை கரூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். மேலும், கரூர் காவல் நிலையத்துக்கு வந்த எஸ்.பி சுந்தரவதனம் விசாரணையை தீவிரப்படுத்த உத்தரவிட்டுவிட்டுச் சென்றார். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் சாந்தி (42), மேகலா (42), மாயா (45) ஆகிய மூன்று பெண் புரோக்கர்கள், கார்த்தி (28), கார்த்திகேயன் (27), சந்தோஷ் (30), தன்னாசி என்ற சமுத்திரபாண்டி (27), கௌதம் (30) உள்ளிட்ட எட்டுப் பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு, சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த குற்றத்துக்காக போக்சோ வழக்கில் அவர்களைக் கைதுசெய்தனர்.

மோகன் (ஓய்வுபெற்ற எஸ்.ஐ)
மோகன் (ஓய்வுபெற்ற எஸ்.ஐ)

எட்டுப் பேரையும் கைதுசெய்த போலீஸார், அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அழைத்துச் சென்றனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக காந்தி கிராமம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மோகன் என்பவரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், போக்சோ வழக்கில் அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்துவந்த வழக்கில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் உட்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.