Published:Updated:

`அதிகரிக்கும் கட்டுமான நிறுவனங்களின் மோசடி': அதிரடி சோதனையில் 500 கோடி ரூபாய் பறிமுதல்!

கட்டுமான பணியாளர்கள்

சோதனையில் கட்டுமான நிறுவனம் வரி ஏய்ப்பு செய்தது உறுதி செய்யப்பட்டு, இதற்கான பல ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் என பறிமுதல் செய்யப்பட்டன. கணக்கில் காட்டப்படாத 500 கோடி ரூபாய் பணம் வருமானவரித் துறை நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கட்டுமான நிறுவனத்தின் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 500 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே என்ற கட்டுமான நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரை.

செய்யாதுரையின் எஸ்.பி.கே கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடம் அருப்புக்கோட்டையில் உள்ளது. அந்த நிறுவனத்திலும், ராமநாதபுரத்தில் உள்ள பங்குதாரர் நிறுவனத்திலும் வருமானவரித் துறை சோதனை செய்துள்ளனர்.

கட்டுமான பணி
கட்டுமான பணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வருமானவரித் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் இக்கட்டுமான நிறுவனம் வரி ஏய்ப்பு செய்தது உறுதி செய்யப் பட்டது. மேலும், இதற்கான பல ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதாவது, சில ஆண்டுகளாகவே கொள்முதல் மற்றும் செலவு செய்தது போன்ற போலியான கணக்கு வழக்குகளை காண்பித்து இந்நிறுவனங்கள் தொடர் மோசடியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் கணக்கில் காட்டப்படாத 500 கோடி ரூபாய் பணம் வருமானவரித் துறை நடத்திய சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டது. தங்களது வருவாயை மறைத்து அரசை ஏமாற்றியது குறித்து தற்போது இந்நிறுவனங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.