Published:Updated:

கம்போடியாவில் அக்கவுன்ட்.. கறுப்புப் பணம் பதுக்கல்?! - மணப்பாறை எலெக்ட்ரீசியனை வளைத்த ஐ.டி!

வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருபவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் திருச்சி மணப்பாறையில் பரபரப்பு நிலவுகிறது.

திருச்சி மாவட்டத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனைகள் நடத்துவதால் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் திருச்சி சத்திரம்பேருந்து நிலையம் அருகே செயல்பட்டுவரும் தனியார் நகைக்கடை ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அங்கு சோதனை நடத்தினர்.

வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், வருமான வரித்துறை அதிகாரிகள் மணப்பாறையில் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள விராலிமலை சாலையில் சிவாஜி சிட்டியில் வசித்து வருபவர் ஜெகநாதன். எலெக்ட்ரீசியன் ஆன இவர், அவரின் அண்ணன் நடத்திவந்த கிராமாலயா எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில், ஆரம்பத்தில் அவருக்குத் துணையாக இருந்ததாகவும், மத்திய அரசிடமிருந்து திட்டங்கள் பெருவதற்கு உதவுவதாக பலரிடம் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவரின் அண்ணன் இறந்துபோனார்.

இந்த நிலையில் ஜெகநாதன், மக்கள் நலவாழ்வு அறக்கட்டளை எனும் பெயரில், கடந்த 9 வருடங்களாக தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திவருகிறார். மேலும், மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் முதலீட்டுத் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறாராம்.

வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
`தடையை மீறி தண்ணீர் உறிஞ்சுகிறார்கள்!' -திருச்சி குடிநீர் ஆலைக்கு எதிராக நள்ளிரவில் கொதித்த மக்கள்

அதன்படி பல்வேறு ஊர்களில் நிகழ்ச்சிகள் நடத்தி, தனது அறக்கட்டளைக்கு வெளிநாடுகளிலிருந்து பலகோடி ரூபாய் பணம் வர உள்ளதாகவும், அந்தப் பணத்தை தனது வாடிக்கையாளர்களுக்குப் பிரித்து தர இருப்பதாகவும்கூறி வசூல்வேட்டை நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஜெகநாதன் வீட்டுக்கு நேற்று காலை 6 மணிக்கு திருச்சி மற்றும் சென்னையிலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 8-க்கும் மேற்பட்டோர் 3 சொகுசுக் கார்களில் வந்து திடீரென ஆய்வு மேற்கொண்டனர். துப்பாக்கி ஏந்திய போலீஸார் வீட்டின் முன்பகுதியில் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஜெகநாதனின் வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள், பணம் ஏதும் வைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்தனர்.

இதுமட்டுமின்றி ஜெகநாதன் மற்றும் அவரின் மகள் சுகன்யா, மருமகன் பிரபு ஆகியோரிடம் சுமார் 9 மணி நேரம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

மேலும், ஜெகநாதன் தான் நடத்தும் அறக்கட்டளைக்கு கம்போடியா நாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருந்ததாகவும், அந்த வங்கிக் கணக்கு மூலம் பணம் பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், கம்போடியா நாட்டுக்கு அடிக்கடி ஜெகநாதன் சென்று வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஜெகநாதனின் வீட்டில் இருந்த கம்போடியா நாட்டு வங்கிக் கணக்கு புத்தகம், காசோலைகள் சிக்கியிருப்பதாகவும், அவற்றை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனினும், சோதனைக்கு என்ன காரணம் என்பதை வருமான வரித்துறை வெளிப்படையாக இதுவரை அறிவிக்கவில்லை.

ஜெகநாதன் வீட்டின் உள்ளே நடப்பது அனைத்தும் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஜெகநாதன் வீட்டில் கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகத் தகவல் பரவவே, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு