Published:Updated:

`ரூ.350 கோடிக்கு மேல் கணக்கில் காட்டாத சொத்து!' - ஜேப்பியார் குழும ரெய்டில் சிக்கியவை என்ன?

கடந்த 4 நாள்களாக நடந்துவந்த இந்தச் சோதனை தொடர்பாக வருமான வரித்துறை தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜேப்பியார் குழும கல்லூரி
ஜேப்பியார் குழும கல்லூரி

சத்யபாமா பல்கலைக்கழகம், டாக்டர் ஜேப்பியாரால் 1987-ல் தொடங்கப்பட்டது. ஜேப்பியார் அறக்கட்டளையின் கீழ் செம்மஞ்சேரியில் இயங்கிவரும் ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சத்தியபாமா கல்லூரி, சூளைமேட்டில் உள்ள பனிமலர் கல்லூரி உள்ளிட்ட 32 இடங்களில், கடந்த 4 நாள்களாக வருமான வரித்துறை சோதனை நடந்துவந்தது. பல ஆண்டுகளாக, வருமான வரி ஏய்ப்பு செய்துவந்ததாக எழுந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடந்தது எனக் கூறப்படுகிறது.

ரெய்டு
ரெய்டு

கடந்த 4 நாள்களாக நடந்துவந்த இந்தச் சோதனை தொடர்பாக வருமான வரித்துறை தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ``இந்தச் சோதனையில் கல்லூரி மாணவர்களிடம் வாங்கப்பட்ட கட்டணத்துக்கு முறையான கணக்கு காண்பிக்கப்படவில்லை. அதற்கான பில்களில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி மாணவர்களிடம் வாங்கப்பட்ட கட்டணம், நன்கொடையைக் கணக்கில் காட்டாமல், வேறு நிறுவனங்களுக்கு மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

`வருடத்திற்கு 1,500 பேர்; 20 கோடிக்கு மேல் வசூல்?'- நீட் கோச்சிங் சென்டரை அதிரவைத்த ரெய்டு!

அதேபோல் கணக்கில் காட்டப்படாத வரவுகள், ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.5 கோடி பணம் என ரூ.350 கோடி மேலான அளவுக்கு கணக்கில் காட்டப்படாத சொத்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடந்து வருவதாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது.

ரெய்டு
ரெய்டு

இதேபோல் ஈரோடு கட்டுமான நிறுவனம் ரூ.3,300 கோடி ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளது எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஈரோடு, ஹைதராபாத், மும்பை, கோவா, டெல்லி, ஆக்ராவில் உள்ள 42 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டாத ரூ.4.19 கோடி, ரூ.3.2 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஹில் ரமானி விவகாரத்தில் அடுத்து என்ன.. சி.பி.ஐ எடுக்கும் ரெய்டு அஸ்திரம்?