Published:Updated:

சென்னை மாநகராட்சி: 23-வது வார்டில் `தீப்பெட்டிச் சின்னம்' வெற்றிபெற்றது எப்படி?! - யார் இந்த ராஜன்?

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில், 23-வது வார்டில் தீப்பெட்டிச் சின்னத்தில் போட்டியிட்ட ராஜன் கவுன்சிலராகியிருக்கிறார். இந்த வார்டில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மமக-வைச் சேர்ந்த ஷேக் முஹம்மது அலி தோல்வியடைந்துள்ளார்.

சென்னை மாநகராட்சி: 23-வது வார்டில் `தீப்பெட்டிச் சின்னம்' வெற்றிபெற்றது எப்படி?! - யார் இந்த ராஜன்?

சென்னை மாநகராட்சியில், 23-வது வார்டில் தீப்பெட்டிச் சின்னத்தில் போட்டியிட்ட ராஜன் கவுன்சிலராகியிருக்கிறார். இந்த வார்டில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மமக-வைச் சேர்ந்த ஷேக் முஹம்மது அலி தோல்வியடைந்துள்ளார்.

Published:Updated:
சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் 23-வது வார்டை திமுக, தனது கூட்டணிக் கட்சியான மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது. இந்த வார்டில் உதயசூரியன் சின்னத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் ஷேக் முஹம்மது அலி போட்டியிட்டார். அதனால் இந்த வார்டில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்த திமுக-வைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிருப்தியடைந்தனர். அவர்களில் தேவி, கிளாரா லோகநாதன் என இருவர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். இதில் தேவிக்கு 1,772 ஓட்டுகளும், கிளாரா லோகநாதனுக்கு 1,429 ஓட்டுகளும் கிடைத்தன.

புழல் ஷேக் முகமது அலி
புழல் ஷேக் முகமது அலி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஷேக் முஹம்மது அலி 2,271 ஓட்டுகளைப் பெற்றார். திமுக, கூட்டணிக் கட்சியின் ஓட்டுகள் பிரிக்கப்பட்டதால் தீப்பெட்டிச் சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ராஜன் 3,953 ஓட்டுகள் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார்.

யார் இந்த ராஜன் என்று திமுக நிர்வாகிகளிடம் பேசினோம். ``ராஜனின் குடும்பம் காங்கிரஸ் பாரம்பர்யமிக்கது. இவரின் தந்தை பர்னபாஸ், காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பதவியில் இருந்தவர். சுயேச்சையாகப் போட்டியிட்ட ராஜன், திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயக்குமார் எம்.பி-யின் தீவிர ஆதரவாளர். 31-வது வார்டு பகுதியைச் சேர்ந்த ராஜன், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். சமூக சேவைகளிலும் ஈடுபட்டுவந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உள்ளாட்சித் தேர்தலில் ராஜன் போட்டியிட விரும்பினார். ஆனால் திமுக கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு சென்னை மாநகராட்சியின் 31-வது வார்டு ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் ராஜனால் போட்டியிட முடியவில்லை. அதனால் அந்த வார்டில் அவரின் சகோதரி களமிறங்கினார். இதையடுத்து சுயேச்சையாக ராஜன், 23-வது வார்டில் தீப்பெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார்.

தீப்பெட்டிச் சின்னத்துடன் செல்லும் ராஜன்
தீப்பெட்டிச் சின்னத்துடன் செல்லும் ராஜன்

1,772 ஓட்டுகளைப் பெற்ற தேவி, திமுக வட்டச் செயலாளர் சரவணனின் மனைவி. இவருக்கு சீட் கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்டுள்ளார். 1,429 ஓட்டுகளைப் பெற்ற கிளாரா லோகநாதனும் திமுக-வைச் சேர்ந்தவர். கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சீட் கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்டு ஓட்டுகளைப் பிரித்த காரணத்தால் இந்த வார்டில் திமுக-வுக்கு வெற்றி கிடைக்கவில்லை. கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டவர்கள் மீது தலைமை ஏற்கெனவே நடவடிக்கை எடுத்திருந்தது" என்றனர்.

இது குறித்து கவுன்சிலர் ராஜனிடம் பேச அவரைத் தொடர்பு கொண்டபோது `பிறகு பேசுகிறேன்’ என்று இணைப்பை துண்டித்துவிட்டார்.

திமுக சார்பில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த புழல் ஷேக் முஹம்மது அலியைத் தொடர்புகொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism