Published:Updated:

45 துப்பாக்கிகளுடன் சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட தம்பதி - டெல்லியில் அதிர்ச்சி

துப்பாக்கிகள் ( ட்விட்டர் )

டெல்லியிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் 45 கைத்துப்பாக்கிகளுடன் கணவன், மனைவி பிடிபட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

45 துப்பாக்கிகளுடன் சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட தம்பதி - டெல்லியில் அதிர்ச்சி

டெல்லியிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் 45 கைத்துப்பாக்கிகளுடன் கணவன், மனைவி பிடிபட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
துப்பாக்கிகள் ( ட்விட்டர் )

டெல்லி சர்வதேச விமான நிலையமான இந்திரா காந்தி விமான நிலையத்தில் கணவன், மனைவியான ஜக்ஜித் சிங், ஜஸ்விந்தர் கௌர் ஆகியோர் இரண்டு டிராலி பேக்குகளுடன் வந்துள்ளனர். சோதனை மையத்தில் அதைச் சோதித்தபோது இரண்டு பேக் முழுவதும் கைத்துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த தேசியப் பாதுகாப்புப்படை, தீவிரவாத தடுப்புப் பிரிவு அந்தத் துப்பாக்கிகள் உண்மையானவையா அல்லது போலியானவையா எனச் சோதனையிட்டனர்.

டெல்லி விமான நிலையம்
டெல்லி விமான நிலையம்

அதன் பிறகு அளித்த முதற்கட்ட அறிக்கையில், ``துப்பாக்கிகள் முழுமையாகச் செயல்படுவதை தேசியப் பாதுகாப்புப் படை (NSG) உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தத் துப்பாகிகள் தொடர்பாக அந்தத் தம்பதியிடம் விசாரித்தபோது, ஜக்ஜித் சிங், `என்னுடைய சகோதரர் மஞ்சித் சிங் பாரிஸிலிருந்து வியட்நாமுக்கு நாங்கள் வந்து தரையிறங்கிய பின்னர் இந்தப் பைகளை என்னிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு, மஞ்சித் சிங் விமான நிலையத்தைவிட்டுச் சென்றுவிட்டார். துருக்கியிலிருந்து மேலும் 25 கைத்துப்பாக்கிகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்தோம்" எனக் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் ஒப்புக்கொண்டனர். துப்பாக்கிகள் கொண்டு வந்ததன் நோக்கம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காவல்துறை
காவல்துறை

குற்றம்சாட்டப்பட்டிருக்கும் தம்பதி எடுத்துச் சென்ற இரண்டு டிராலி பேக்குகளில் தோராயமாக ரூ 22.5 லட்சம் மதிப்புள்ள 45 வகையான பிராண்டட் துப்பாக்கிகள் இருந்துள்ளன. இந்தச் சம்பவம் இந்திரா காந்தி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.