Published:Updated:

அமெரிக்கா: கேசினோ விளையாட்டில் 10,000 டாலர்! - இந்திய வம்சாவளிக்கு நேர்ந்த கொடூரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்திய வம்சாவளிக்கு நேர்ந்த கொடூரம்!
இந்திய வம்சாவளிக்கு நேர்ந்த கொடூரம்!

அந்த விளையாட்டில் ஸ்ரீரங்க அரவப்பள்ளி 10,000 அமெரிக்க டாலரை வென்றிருக்கிறார்.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்க அரவப்பள்ளி (54). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், அங்குள்ள மருந்து நிறுவனமொன்றில் பணி புரிந்துவந்தார். நியூஜெர்சி நகரில் தன் குடும்பத்தினருடன் வசித்துவந்த இவர், இரவு நேரங்களில் கேசினோவுக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். கடந்த வியாழக்கிழமை இரவு வழக்கம்போல, பென்சில்வேனியா நகரிலுள்ள ஒரு கேசினோவுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அந்த விளையாட்டில் ஸ்ரீரங்க அரவப்பள்ளி 10,000 அமெரிக்க டாலரை வென்றிருக்கிறார்.

கேசினோ (சூதாட்ட விடுதி)
கேசினோ (சூதாட்ட விடுதி)

இரவு முழுவதும் கேசினோவில் விளையாடிவிட்டு, மறுநாள் காலை நியூ ஜெர்சியிலுள்ள தனது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்தபடி அவரின் வீட்டுக்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்திருக்கிறார். அந்த நபரைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்ரீரங்க அரவப்பள்ளி கத்திக் கூச்சலிட்டிருக்கிறார்.

ஆனால், வீட்டில் யாரும் இல்லாததால் அந்த மர்ம நபர் அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, கேசினோவில் அவர் வென்ற 10,000 டாலரைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார். இந்தக் கொலை தொடர்பாகத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அரவப்பள்ளியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சுட்டுக் கொலை
சுட்டுக் கொலை
சித்தரிப்புப் படம்

அதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், பென்சில்வேனியாவின் நோரிஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் ஸ்ரீரங்க அரவப்பள்ளியைக் கொலை செய்தது தெரியவந்தது. அதையடுத்து, அந்த இளைஞரைக் கைதுசெய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்திய வம்சாவளி ஒருவர் அமெரிக்காவில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்ரீரங்க அரவப்பள்ளியின் மறைவுக்கு ஏராளமான இந்தியர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு