Published:Updated:

கரூர்: மண் பானைக்குள் இறந்தநிலையில் ஆண் குழந்தை! - அதிர்ச்சியில் மக்கள்

காவிரி ஆறு
காவிரி ஆறு ( நா.ராஜமுருகன் )

காவிரி ஆற்றில், பிறந்து சில தினங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று, இறந்தநிலையில் மண்பானைக்குள் கிடந்தது. அந்தக் குழந்தையின் உடலில் ஊதா நிற பனியன் அணிவிக்கப்பட்டிருந்தது.

கரூர் மாவட்டத்தில், ஓடும் காவிரி ஆற்றில் பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று, மண் பானைக்குள் இறந்தநிலையில் கிடந்த சம்பவம், மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

குழந்தை இறந்து கிடந்த இடம்
குழந்தை இறந்து கிடந்த இடம்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது கே.பேட்டை. இந்தப் பகுதியிலுள்ள பெரிய பாலத்துக்கு வடக்கே ஓடும் காவிரி ஆற்றில், பிறந்து சில தினங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று, இறந்தநிலையில் மண்பானைக்குள் கிடந்தது. அந்தக் குழந்தையின் உடம்பில் ஊதா கலர் பனியன் அணிவிக்கப்பட்டிருந்தது. ரோஸ் கலர் பூ போட்ட ஜட்டியும் அணிவிக்கப்பட்டிருந்தது.

கரூர்: `உங்க வீட்டுல குட்கா சோதனை பண்ணணும்!' - மளிகைகடைக்காரர் வீட்டில் கைவரிசை காட்டிய திருடர்கள்

அதோடு, குழந்தையின் தொப்புள்கொடியில் ஊதா கலர் கிளிப் அணிவிக்கப்பட்டும், குழந்தையின் உடலைச் சுற்றி மஞ்சள்தூள் தூவப்பட்டும் இருந்தது. தவிர, குழந்தையின் வலது கையில் ரூ. 50 ம் இருந்தது. காவிரி ஆற்றுக்குக் குளிக்கச் சென்ற சிலர், இந்த ஆண் குழந்தை இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, இந்தத் தகவலை அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்தனர். தகவலின் பேரில் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்த கிராம நிர்வாக அலுவலர், லாலாப்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார்.

குளித்தலை அரசு மருத்துவமனை
குளித்தலை அரசு மருத்துவமனை
நா.ராஜமுருகன்

கிராம நிர்வாக அலுவலரின் புகாரையடுத்து ஸ்பாட்டுக்கு வந்த லாலாப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன், இறந்துகிடந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த லாலாப்பேட்டை காவல் நிலைய போலீஸார், இறந்து கிடந்த குழந்தை யார், அதன் தாய் யார், எப்படிக் குழந்தை இறந்தது, குழந்தையைக் காவிரி ஆற்றுக்கரையில் கொண்டு வநது போட்டது யார்... என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று, மண்பானைக்குள் இறந்து கிடந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு