Published:Updated:

பெண் குழந்தை பிறந்ததால் அதிருப்தி; இரண்டு மாதக் குழந்தையை மைக்ரோவேவ் அவனில் வைத்துக் கொன்ற தாய்?

டெல்லி போலீஸார்

டெல்லியில் இரண்டு மாதக் குழந்தையை மைக்ரோவேவ் அவனில் வைத்துக் கொன்றது தொடர்பாக குழந்தையின் தாயாரிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

பெண் குழந்தை பிறந்ததால் அதிருப்தி; இரண்டு மாதக் குழந்தையை மைக்ரோவேவ் அவனில் வைத்துக் கொன்ற தாய்?

டெல்லியில் இரண்டு மாதக் குழந்தையை மைக்ரோவேவ் அவனில் வைத்துக் கொன்றது தொடர்பாக குழந்தையின் தாயாரிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

Published:Updated:
டெல்லி போலீஸார்

டெல்லியில் சிராக் டெல்லி என்ற இடத்தில் வசிப்பவர் குல்ஷன் கௌசிக். இவரின் மகள் டிம்பிள் கௌசிக். டிம்பிள் வீட்டிலிருந்தபோது தன் மகன், இரண்டு மாதப் பெண் குழந்தையுடன் வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார். இதனால் டிம்பிளின் மாமியார் கதவைத் தட்டிப்பார்த்தார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்களை உஷார்படுத்தினார். கதவு பூட்டப்பட்டிருப்பது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து கதவைத் திறந்து பார்த்தபோது டிம்பிளும், அவரின் நான்கு வயது மகனும் மயங்கிக்கிடந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸார் டிம்பிளின் இரண்டு மாதப் பெண் குழந்தையைக் காணவில்லை என்பதால், வீடு முழுக்க தேடிப்பார்த்தனர். ஆனால், கிடைக்கவில்லை.

மரணம்
மரணம்
மாதிரிப் படம்

அதையடுத்து, டிம்பிள் மாமியார் வீடு முழுக்க தேடிப்பார்த்ததில் இரண்டாவது மாடியிலிருந்த மைக்ரோவேவ் அவனுக்குள் குழந்தை இறந்தநிலையில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைக் கண்டு பதறிப்போன டிம்பிளின் மாமியார், டிம்பிள் குழந்தையைக் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸாரிடம் சந்தேகம் தெரிவித்தார். அதையடுத்து, போலீஸார் குழந்தையின் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து டிம்பிளிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போலீஸ்
போலீஸ்

இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி பெனிதா மேரி கூறுகையில், ``பெண் குழந்தை பிறந்ததில் டிம்பிள் மிகவும் அதிருப்தியிலிருந்திருக்கிறார். இது தொடர்பாக டிம்பிள் தன் கணவருடனும் சண்டை போட்டுள்ளார். குழந்தையின் மரணம் குறித்து கொலை வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகிறோம். இது குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரித்துவருகிறோம். குழந்தையின் தாய்மீது சந்தேகம் இருக்கிறது" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism