Published:Updated:

தேனி: அண்டாவில் சாணி உருண்டை போட வைத்து திருடுப்போன நகை மீட்பு! - போலீஸின் வித்தியாச முயற்சி

மீட்கப்பட்ட நகை

``நகையைத் திருடியவர்கள் மாட்டுச் சாண உருண்டையினுள் 12 பவுன் நகையை வைத்து போட்டுவிட்டு செல்லுங்கள். இல்லையென்றால் மோப்பநாயை வரவழைத்து...”

தேனி: அண்டாவில் சாணி உருண்டை போட வைத்து திருடுப்போன நகை மீட்பு! - போலீஸின் வித்தியாச முயற்சி

``நகையைத் திருடியவர்கள் மாட்டுச் சாண உருண்டையினுள் 12 பவுன் நகையை வைத்து போட்டுவிட்டு செல்லுங்கள். இல்லையென்றால் மோப்பநாயை வரவழைத்து...”

Published:Updated:
மீட்கப்பட்ட நகை

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டையைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரின் மகள் ரெஜினா திருமணம் முடிந்து திருவண்ணாமலை வந்தவாசியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் மார்க்கையன்கோட்டை பேச்சியம்மன் கோயில் திருவிழாவுக்காக ஏப்ரல் 4 -ம் தேதி குடும்பத்துடன் வந்திருந்தார். கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக ஊரின் மையப்பகுதியில் ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏப்ரல் 6 -ம் தேதி நடைபெற்றது. இதற்காக வெள்ளைச்சாமி, ரெஜினா உள்ளிட்டோர் வீட்டைப் பூட்டி விட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பியுள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரெஜினாவின் 12 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் காணவில்லை.

அண்டாவில் போடப்பட்ட சாணத்தில் நகையைத் தேடும் பெண்கள்
அண்டாவில் போடப்பட்ட சாணத்தில் நகையைத் தேடும் பெண்கள்

இதுகுறித்து ரெஜினா சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் சின்னமனூர் காவல் ஆய்வாளர் சேகர் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அந்தப் பகுதியில் மொத்தம் 30 வீடுகள் மட்டுமே உள்ளன. வீட்டின் கதவுகளோ, ஜன்னல்களோ உடைக்கப்படவில்லை. ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் வீட்டை பூட்டி சாவிய ஜன்னல் அருகே உள்ள சோப்பு டப்பாவில் வைத்துவிட்டு சென்றுள்ளனர். மீண்டும் வந்து பார்த்தப்போது சோப்பு டப்பாவில் சாவி இருந்தது போன்று அப்படியே இருந்துள்ளது. எனவே அருகே உள்ளவர்கள் நகையை திருடியிருக்கக் கூடும் என முடிவு செய்த காவல் ஆய்வாளர் சேகர் சாதுர்யமான முறையில் நகைகளை மீட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்ஸ்பெக்டர் சேகர்
இன்ஸ்பெக்டர் சேகர்

இதுகுறித்து சின்னமனூர் காவல் ஆய்வாளர் சேகரிடம் பேசினோம். ``திருட்டுப் போன வீடுகளுக்கு அருகே உள்ளவர்கள் தான் நகையைத் திருடியிருக்கக் கூடும் சந்தேகித்தேன். இதனால் ஊர் பெரியவர்களிடம் பேசி, பாதிக்கப்பட்டவரின் வீட்டின் முன் ஒரு அண்டா வைத்து அதில் இந்தப் பகுதியைச் சேர்ந்த அனைவரும் வந்து மாட்டுச் சாண உருண்டையைப் போட வேண்டும். நகையைத் திருடியவர்கள் சாண உருண்டையினுள் 12 பவுன் நகையை வைத்து போட்டுவிட்டு செல்லுங்கள். இல்லையென்றால் மோப்பநாயை வரவழைத்தும், இப்பகுதியைச் சேர்ந்த அனைவரும் கை ரேகைகளை பதிவு செய்தும் எளிதில் திருடரைப் பிடித்து விடுவோம் என அனைவரையும் அழைத்து எச்சரித்தேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதலில் பலர் எங்களைச் சந்தேகப்படாதீர்கள் எனவும் இது தங்களுக்கு அசிங்கம் எனவும் கூறி மறுத்துள்ளனர். இதையடுத்து ஊர் பெரியவர்களிடம் பேசி அனைவரையும் சம்மதிக்க வைத்தேன். இதன் மூலம் யாருக்கும் எந்தத் தொந்தரவும் ஏற்படாது இல்லையெனில் எல்லோரையும் விசாரிக்க வேண்டி வரும் எனக் கூறினேன். இதனால் அப்பகுதி மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

அண்டா
அண்டா

பிறகு ஏற்கெனவே திட்டமிட்டது போல, வெள்ளைச்சாமியின் வீட்டிற்கு முன் அண்டாவை வைத்து அதில் அனைவரையும் வந்து சாண உருண்டைகளை போட வைத்தோம். அனைவரும் போட்டு விட்டனரா என உறுதி செய்தபின், அனைத்து சாண உருண்டைகளையும் பிரித்தபோது பாதிக்கப்பட்டவரின் ஒரு செயின், ஒரு ஜோடி தோடு எதிர்பார்த்தைப் போலவே இருந்தன. இதையடுத்து பொதுமக்களின் முன்னிலையில் நகையை உரியவரிடம் ஒப்படைத்தோம். விரைவில் ரொக்கத்தையும் மீட்டுக் கொடுப்போம்” என்றார்.

திருட்டுப் போன நகைகளை சுவாரஸ்யமான முறையில் கண்டுபிடித்து உரிவரிடம் ஒப்படைந்துள்ள இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism